அகமதாபாத் விமான விபத்து அதிர்ச்சியளிக்கிறது: முதல்வர் ஸ்டாலின்

அகமதாபாத் விமான விபத்து அதிர்ச்சியளிக்கிறது: முதல்வர் ஸ்டாலின்
Updated on
1 min read

சென்னை: “அகமதாபாத் விமான விபத்தில், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் குறித்து மிகவும் கவலை கொள்கிறேன். சாத்தியமுள்ள அனைத்து வழிகளிலும் மீட்பு, நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என நம்புகிறேன்” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக முதல்வர் தனது சமூகவலைதளப் பக்கத்தில், “242 பயணிகளுடன் ஏர் இந்தியா AI 171 விமானம் அகமதாபாத்தில் கோரமாக விபத்துக்குள்ளானது அறிந்து மிகவும் அதிர்ச்சியடைந்தேன்.

பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் குறித்து மிகவும் கவலை கொள்கிறேன். சாத்தியமுள்ள அனைத்து வழிகளிலும் மீட்பு, நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என நம்புகிறேன்” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

முன்னதாக, குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 242 பேருடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. இதனை ஏர் இந்தியா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. ஏஐ171 (AI)171 என்ற எண் கொண்ட விமானம் விபத்துக்குள்ளானது என்று எக்ஸ் பக்கத்தில் ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. | விரிவாக வாசிக்க > அகமதாபாத்தில் 242 பேருடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்து - மீட்புப் பணிகள் தீவிரம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in