தேர்தல் வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும்: மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் வலியுறுத்தல்

மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்தும், தமிழக அரசு மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்த வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்க நடைபயணத்தை சென்னையில் மாநில செயலாளர் பெ.சண்முகம் நேற்று தொடங்கி வைத்து துண்டு பிரசுரங்களை வழங்கினார். | படம்: எஸ்.சத்தியசீலன் |
மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்தும், தமிழக அரசு மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்த வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்க நடைபயணத்தை சென்னையில் மாநில செயலாளர் பெ.சண்முகம் நேற்று தொடங்கி வைத்து துண்டு பிரசுரங்களை வழங்கினார். | படம்: எஸ்.சத்தியசீலன் |
Updated on
1 min read

சென்னை: 2021-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் திமுக அரசு நிறைவேற்ற வேண்டும். குறிப்பாக, மாதந்தோறும் மின் அளவீடு கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்தார்.

மக்கள் விரோத கொள்கைகளை மத்திய அரசு கைவிட வேண்டும், தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், பிரச்சார இயக்க நடைபயணம் பாரிமுனையில் நேற்று தொடங்கியது.

இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் சண்முகம் தொடங்கி வைத்து பேசியதாவது: தமிழகம் முழுவதும் ஜூன் 11-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழுக்கள் நகரங்களில் நடைபயணமாகவும், கிராமங்களில் இருசக்கர வாகனங்கள் மூலமாகவும் சென்று மக்களிடம் மத்திய, மாநில அரசிடம் வலியுறுத்த வேண்டிய கோரிக்கைகள் தொடர்பாக பிரசாரம் செய்யவுள்ளனர். நிறைவு நாளான வரும் 20-ம் தேதி அம்பத்தூரில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் பேபி கலந்துகொண்டு பேசுகிறார்.

மத்திய பாஜக அரசு 2014-ம் ஆண்டு முதல் இப்போது வரை அரசியல் சாசனத்துக்கு விரோதமாகவும், அரசியம் சாசனம் மக்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் மற்றும் மாநில அரசுகளுக்கு வழங்கிய அதிகாரங்களை பறிக்கும் வகையிலும் தொடர்ந்து செயல்படுகிறது.

அதேபோல, கடந்த 2021-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும். மின் கட்டணம் செலுத்த முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால், மின் அளவீடு மாதந்தோறும் எடுக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தனர்.

இந்த மிக முக்கிய கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளது. எனவே, மாதந்தோறும் மின் அளவீடு கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். நீர்நிலை ஆக்கிரமிப்பு என்று கூறி சாதாரண மக்களை வெளியேற்றக் கூடாது. ஆகவே, இப்பிரச்னையில் தமிழக அரசு ஒரு கொள்கை முடிவுக்கு வரவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியபோது, ‘‘அனைத்து குடிமக்களும் குடிமனை பட்டா என்பது திமுக கொடுத்த வாக்குறுதிதான். ஆனால், அதற்கு மாறாக மக்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கை எடுக்கிறார்கள். இது நல்லதல்ல. பாஜக -அதிமுக ஒரு சந்தர்ப்பவாத கூட்டணியை ஏற்படுத்தி உள்ளனர்.

இக்கூட்டணியை தோற்கடிக்கும் வலிமை தற்போதைய அரசியல் சூழ்நிலையில் திமுக கூட்டணிக்குதான் உள்ளது. எனவே, திமுக தலைமையிலான கூட்டணியில் 2026 தேர்தலை சந்திக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in