தமிழகம் முழுவதும் 18 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: உள்துறை செயலர் தீரஜ் குமார் அறிவிப்பு

தமிழகம் முழுவதும் 18 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: உள்துறை செயலர் தீரஜ் குமார் அறிவிப்பு
Updated on
1 min read

சென்னை: சென்னை, சேலம், நெல்லை என தமிழகம் முழுவதும் 18 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 3 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உள்துறை செயலர் தீரஜ்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த டிஐஜி மகேஷ்குமார், தமிழக கடலோர பாதுகாப்பு குழும டிஐஜியாகவும், அங்கிருந்த ஜெயந்தி காவல் தொழில்நுட்ப பிரிவு டிஐஜியாகவும், சென்னை தெற்கு மண்டல இணை ஆணையராக இருந்த எம்.ஆர்.சிபிசக்கரவர்த்தி தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவன முதன்மை விஜிலென்ஸ் அதிகாரியாகவும், சென்னை மேற்கு மண்டல இணை ஆணையராக இருந்த பகர்லா செபாஸ் கல்யாண் சென்னை தெற்கு மண்டல இணை ஆணையராகவும் விழுப்புரம் சரக டிஐஜி திஷா மித்தல் சென்னை மேற்கு மண்டல இணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல், சேலம் சரக டிஐஜி இ.எஸ்.உமா, விழுப்புரம் சரக டிஐஜியாகவும், தமிழ்நாடு குற்ற ஆவண காப்பக எஸ்.பி. நாகஜோதி, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய எஸ்.பியாகவும் (1), காத்திருப்போர் பட்டியலில் இருந்த எஸ்பி அமனத் மன், சென்னை சமூகநீதி மற்றும் மனித உரிமை ஆணையத்தின் உதவி ஐஜியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை பயிற்சி பள்ளி எஸ்பி லாவண்யா, சென்னை குற்ற ஆவண காப்பக எஸ்.பி.யாகவும், சேலம் தலைமையக துணை ஆணையர் வி.கீதா, சென்னை பெருநகர காவல் தலைமையக துணை ஆணையராகவும், திருநெல்வேலி நகர மேற்கு துணை ஆணையர் வி.கீதா, சேலம் தலைமையக துணை ஆணையராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சேலம் நகர தெற்கு துணை ஆணையர் வேல்முருகன் தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராகவும், அங்கிருந்த கே.பிரபாகர் சென்னை சைபர் கிரைம் எஸ்பியாகவும் (3), நாகப்பட்டினம் எஸ்பி அருண் கபிலன், சென்னை தலைமையக உதவி ஐஜியாகவும், மதுரை மண்டல சிவில் சப்ளை சிஐடி எஸ்பி செல்வகுமார், நாகப்பட்டினம் எஸ்.பி.யாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தேனி ஏஎஸ்பி கேல்கர் சுப்ரமண்யா பாலச்சந்திரா பதவி உயர்வு பெற்று சேலம் தெற்கு துணை ஆணையராகவும் இதேபோல் குளச்சல் ஏஎஸ்பி கம்பம் சாமுவேல் பிரவீன் கவுதம் திருப்பூர் வடக்கு துணை ஆணையராகவும் நாங்குநேரி ஏஎஸ்பி பிரசன்னா குமார் திருநெல்வேலி மேற்கு துணை ஆணையராகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர். இவ்வாறு உள்துறை செயலர் தீரஜ் குமார் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in