வித்தியாசமான தொப்பி அணிவதற்கான காரணம் என்ன? - எல்.முருகன் விளக்கம்

வித்தியாசமான தொப்பியுடன் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்
வித்தியாசமான தொப்பியுடன் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்
Updated on
1 min read

புதுச்சேரி: புதுச்சேரிக்கு வந்திருந்த மத்திய அமைச்சர் முருகன் தற்போது நிகழ்வுகளில் வித்தியாசமான தொப்பி அணிந்துள்ளதற்கான காரணத்தை தெரிவித்தார். பல்வேறு அரசியல் தலைவர்களுக்கும் அடையாளமாக ஒவ்வொரு பொருளுண்டு. அந்தவகையில் மத்திய அமைச்சராக உள்ள முருகன் தற்போது வித்தியாசமான தொப்பி அணிந்து வருகிறார்.

புதுச்சேரிக்கு இரு நாள் நிகழ்வுகளில் பங்கேற்ற அவரிடம் இந்த வித்தியாச தொப்பி அணியும் காரணம் பற்றி கேட்டதற்கு, “கோயிலுக்கு முடி காணிக்கை தந்தேன். முடி வளரும் வரை தொப்பி அணிய சொன்னார்கள். அப்போது எனது நண்பர் இந்த தொப்பி தந்தார். அதை அணிந்து வருகிறேன். நல்லா இருக்குதானே” என்றார்.

அதற்கு அங்கிருந்த அமைச்சர் நமச்சிவாயம், “நேதாஜி ஸ்டைலில் இருக்கிறது,” என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in