Last Updated : 10 Jun, 2025 10:35 AM

11  

Published : 10 Jun 2025 10:35 AM
Last Updated : 10 Jun 2025 10:35 AM

“சனாதன மரபின் சிறந்த துறவி திருவள்ளுவர்” - வைகாசி அனுஷத்தில் ஆளுநர் ரவி மரியாதை

சென்னை: பாரத சனாதன மரபின் சிறந்த துறவியும், தெய்வப்புலவருமான திருவள்ளுவருக்கு, வைகாசி அனுஷத்தில், பண்டைய தமிழ் நாட்காட்டியின் படி அவரது பிறந்தநாளில், தேசம் தனது மரியாதையை செலுத்துகிறது என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்

இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பாரத சனாதன மரபின் மாபெரும் தெய்வப்புலவர் திருவள்ளுவருக்கு, பண்டைய தமிழ் நாள்காட்டியின்படி, வைகாசி அனுஷத்தில், அவரது பிறந்தநாளில், தேசம் தனது மரியாதையை செலுத்துகிறது.

கம்பீரமான திருக்குறளில் பொதிந்துள்ள பக்தி, கர்மம் மற்றும் ஞான யோகங்களின் ஆரோக்கியமான கலவையுடன் ஒருங்கிணைந்த தர்ம வாழ்க்கை குறித்த அவரது போதனைகள், தனிநபர் மற்றும் கூட்டு வாழ்க்கையில் மனிதகுலத்தை வடிவமைத்துத் தொடர்ந்து வழிநடத்துகின்றன. இது தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் ஆட்சியாளர்கள் உள்பட அனைவருக்கும் ஒரு விரிவான மற்றும் நீடித்த கட்டமைப்பை வகுக்கிறது.

அவரது குறள்கள் ஞானத்தின் தூணாக விளங்கி, #வளர்ச்சியடைந்தபாரதத்தை நோக்கிய நமது கூட்டு தேசிய பயணத்தை ஊக்குவிக்கவும் வழிநடத்தவும் நித்திய மதிப்புகளைப் பயன்படுத்துகின்றன.” என ஆளுநர் ரவி தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அவர் திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்தும் புகைப்படங்களையும் ஆளுநர் மாளிகை எக்ஸ் தளம் பகிர்ந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x