Published : 10 Jun 2025 09:07 AM
Last Updated : 10 Jun 2025 09:07 AM

‘வீக் எண்ட்’ மாவட்டச் செயலாளர்! - பொள்ளாச்சி ஜெயராமன் மீது இப்படியொரு பொல்லாப்பு

திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளராக பொள்ளாச்சி ஜெயராமன் பொறுப்பேற்று ஐந்தாண்டுகள் ஆகும் நிலையில், வாரக் கடைசியில் மட்டுமே கட்சி நடவடிக்கைகளுக்காக திருப்பூருக்கு வந்து செல்வதைச் சுட்டிக்காட்டி, ‘வீக் எண்ட்’ மாவட்டச் செயலாளர் என அதிமுக-வுக்குள் இருக்கும் சிலரே அவரை சத்தமில்லாமல் கலாய்க்கிறார்கள்.

திருப்​பூர் அதி​முக-வுக்​குள் இருக்​கும் கோஷ்டி பூசலை சமாளிக்க பொள்​ளாச்​சியி​லிருந்து ஜெய​ரா​மனை திருப்​பூர் மாநகர் மாவட்​டச் செய​லா​ள​ராக இறக்​குமதி செய்​தது அதி​முக தலை​மை. இந்த நிலை​யில், குடும்​பத்தை பொள்​ளாச்​சி​யில் வைத்​து​விட்டு அரசி​யல் நடவடிக்​கை​களுக்​காக அவ்​வப்​போது திருப்​பூருக்கு வந்து செல்​வதை வழக்​க​மாக்​கிக் கொண்​டார் ஜெய​ரா​மன். முக்​கிய நிகழ்​வு​கள் ஏதும் இல்​லாத போது பெரும்​பாலும் அவர் வாரக் கடைசி​யிலேயே திருப்​பூருக்கு வந்து செல்​வ​தால் அவரை ‘வீக் எண்ட்’ மா.செ என தமாஷ் பண்​ணுகி​றார்​கள்.

இதுகுறித்து நம்​மிடம் பேசிய திருப்​பூர் அதி​முக சீனியர்​கள் சிலர், “இப்​போது அதி​முக-​வில் எல்​லோருக்​கும் எஸ்​.பி.வேலுமணி​யைத் தான் பிர​தான​மாக தெரி​கிறது. ஆனால், வேலுமணி அதி​முக-வுக்​குள் வரும் போதே கோவை மாவட்ட அதி​முக செய​லா​ள​ராக இருந்​தவர் பொள்​ளாச்சி ஜெய​ரா​மன். திருப்​பூர் மாவட்ட அதி​முக-வை பொறுத்​தவரை முன்​னாள் அமைச்​சர் எம்​.எஸ்​.எம்​.ஆனந்​தன், எம்​எல்​ஏ-​வான கே.என்​.​விஜயகு​மார், முன்​னாள் எம்​எல்​ஏ-​வான சு.குணசேகரன், முன்​னாள் எம்​பி-​யான சிவ​சாமி என நான்கு பேரும் நான்கு திசை​யில் பாராமுக அரசி​யல் செய்து வரு​கி​றார்​கள். இதனாலேயே உள்​ளூர்க்​காரர்​களை தவிர்த்​து​விட்டு வெளியூர்​கார​ரான பொள்​ளாச்சி ஜெய​ரா​மனை மாநகர் மாவட்​டத்​துக்கு செய​லா​ள​ராக்​கியது தலை​மை.

ஜெய​ரா​மனைப் பொறுத்​தவரை தனது சொந்த மாவட்​ட​மான கோவை​யில் தான் அரசி​யல் செய்ய நினைத்​தார். ஆனால், கோவை மாவட்​டத்​தின் 10 சட்​டப் பேர​வைத் தொகு​தி​களுக்​கும் தான் மட்​டுமே ராஜா​வாக இருக்க வேண்​டும் என நினைக்​கும் வேலுமணி, சமயம் பார்த்து சீனிய​ரான ஜெய​ரா​மனை திருப்​பூர் பக்​கம் திருப்​பி​விட்டு விட்​டார். ஆனாலும் கோவை மாவட்​டத்​தின் மீது ஜெய​ரா​மனுக்கு இன்​ன​மும் ஒரு கண் இருக்​கிறது. அதனால் தான் குடும்​பத்தை அங்​கேயே வைத்​து​விட்டு இங்கு வந்து பார்ட்​டைம் அரசி​யல் செய்​து​விட்​டுச் செல்​கி​றார். திருப்​பூருக்கு வந்​து​விட்​ட​தால், பொள்​ளாச்​சி, கிணத்​துக்​கட​வு, வால்​பாறை தொகு​தி​களை தனி​யாக பிரித்து அதற்கு மாவட்​டச் செய​லா​ள​ராக வரவேண்​டும் என நினைத்த பொள்​ளாச்சி ஜெய​ரா​மனின் ஆசை​யும் இதன் மூலம் நிராசை​யாகி​விட்​டது” என்​ற​னர்.

இன்​னும் சிலரோ, “திருப்​பூர் மாவட்ட அதி​முக-​வில் பொறுப்​பு​களில் இருப்​பவர்​கள் கட்சி வளர்ச்​சிக்காக பெரி​தாக ஏதும் அலட்​டிக் கொள்​ளாத நிலை​யில், பொள்​ளாச்சி ஜெய​ரா​மன் வெளியூரில் இருந்து இங்கு வந்து போனாலும் கட்​சியை கட்​டுக்​கோப்​பாக வைத்​திருப்​ப​தாகவே நினைக்​கி​றோம். அவரைப் பிடிக்​காதவர்​கள் வேண்​டு​மா​னால் அவரை ‘வீக் எண்ட்’ மா.செ என கிண்​டல் பண்​ணலாம். ஆனால், கோஷ்டி சண்​டையை ஒழிக்க இப்​போதைக்கு ஜெய​ரா​மன் மா.செ பதவி​யில் இருப்​பதே ஆறு​தல்” என்​கி​றார்​கள்.

இது தொடர்​பாக திருப்​பூர் மாநகர் மாவட்ட அதி​முக செய​லா​ளர் பொள்​ளாச்சி ஜெய​ரா​மனிடம் கேட்​டதற்​கு, “ஒன்​று​பட்ட கோவை மாவட்​டச் செய​லா​ள​ராக நான் இருந்த போது திருப்​பூரும் கோவை மாவட்​டத்​துக்​குள் தான் இருந்​தது. திருப்​பூர் நகராட்​சி​யாக இருந்த போது நான் திருப்​பூர் மாவட்​டச் செய​லா​ள​ராக இருந்​திருக்​கிறேன். நெகமம் கந்​த​சாமிக்கு பிறகு திருப்​பூர் மாவட்​டச் செய​லா​ள​ராக அதி​க​மான ஆண்​டு​கள் இருந்​தவன் நான். 2020-க்கு முன்பு திருப்​பூர் புறநகர் மாவட்​டச் செய​லா​ள​ராக இருந்​தேன். அதன் பிறகு திருப்​பூர் மாநகர் மாவட்​டச் செய​லா​ள​ராக பணி​யாற்றி வரு​கிறேன். ஆக, நான் ஒன்​றும் திருப்​பூருக்கு அந்​நியன் இல்​லை.

பொள்​ளாச்​சி​யில் இருந்து இங்கு வந்து செல்​வ​தில் எனக்​கொன்​றும் பெரிய சிரமம் இல்​லை. பொள்​ளாச்​சி, கிணத்​துக்​கட​வு, வால்​பாறை தொகு​தி​களை தனி​யாக பிரித்து அதற்கு மாவட்​டச் செய​லா​ள​ராக வேண்​டும் என நான் கேட்​க​வில்​லை. சிலர் அனு​மானத்​தில் அப்​படிச் சொல்​வார்​கள். கட்​சி​யில் சீனியர் என்​ன… ஜூனியர் என்ன? நாம் ஒரு​காலத்​தில் இருந்​தோம். இன்​றைக்கு எஸ்​.பி.வேலுமணி இருக்​கி​றார். அவர் அனை​வ​ருட​னும் சுமுக உறவில் உள்​ளார். நான் திருப்​பூர் மாநகர் மாவட்​டச் செய​லா​ள​ராக இருப்​ப​தில் யாருக்​கும் எந்த வருத்​த​மும் இல்​லை. திருப்​பூர் மாநக​ராட்சி கவுன்​சிலர்​கள் 50 பேரில் 20 பேர் இப்​போது அதி​முக-​வினர். திருப்​பூர் மாநகரை பொறுத்​தவரைக்​கும் எனக்கு கட்​சி​யினர் முழு ஒத்​துழைப்பு அளித்து வரு​கி​றார்​கள்” என்​றார்.

விட்​டுக் கொடுத்த இடத்தை மீண்​டும் எட்​டிப் பிடிப்​பது அத்​தனை சுலபமில்லை என்​பது அம்​மிக் கல்​லை​யும் உடைக்​கும் அரண்​மனை கோழி மூட்​டை​யாம் அரசி​யலுக்கு மட்​டும் விதிவிலக்கா என்​ன?

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x