Published : 09 Jun 2025 02:15 PM
Last Updated : 09 Jun 2025 02:15 PM
சென்னை: தவெகவில் இணைந்துள்ள முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ், கட்சியின் கொள்கை பரப்புப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், பல முன்னாள் எம்எல்ஏக்கள் தவெகவில் இணைந்துள்ளனர்.
தவெக தலைவர் விஜய் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு மற்றும் செயல்திட்டங்களை மேம்படுத்தும் வகையில் டாக்டர் K.G. அருண்ராஜ் Ex IRS கொள்கை பரப்புப் பொதுச் செயலாளர் (Propagada & Policy General Secretary) பொறுப்பில் நியமிக்கப்படுகிறார்.
இவர், எனது உத்தரவு மற்றும் ஆலோசனைக்கு இணங்க, கழகப் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் அவர்களது வழிகாட்டுதலின்படி கழகக் கொள்கைகள் மற்றும் கொள்கை சார்ந்த செயல்திட்டப் பணிகளை மேற்கொள்வார். கழகத் தோழர்களும் அனைத்து நிலை நிர்வாகிகளும் புதிய பொறுப்பாளருக்கு முழு ஒத்துழைப்பை நல்கி வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான கட்டமைப்பு மற்றும் தேர்தல் முன்னெடுப்புகளை முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், "அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ராஜலட்சுமி, திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டேவிட் செல்வின், அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஸ்ரீதரன், ஜேப்பியார் ரெமிபாய் கல்வி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டாக்டர் மரிய வில்சன், முன்னாள் நீதிபதி சுபாஷ் ஆகியோர் அண்மையில் தவெகவில் இணைந்துள்ளனர். அவர்களுக்கு நிர்வாகிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT