Published : 09 Jun 2025 05:38 AM
Last Updated : 09 Jun 2025 05:38 AM

200 தொகுதிகளில் வெற்றிபெறுவோம் என பகல் கனவு காண்கிறார் ஸ்டாலின்: இபிஎஸ் விமர்சனம்

அரக்​கோணம்: தமிழகத்​தில் வரும் 2026 சட்​டப்​பேரவை தேர்​தலில் 200 தொகு​தி​களில் வெற்​றி​பெறு​வோம் என திமுக தலை​வர் ஸ்டாலின் பகல் கனவு காண்​கிறார் என்று அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​னார்.

ராணிப்​பேட்டை மாவட்​டம் அரக்​கோணம் எம்​எல்ஏ சு.ர​வி​யின் மகன் திருமண விழா தக்​கோலத்​தில் நேற்று நடை​பெற்​றது. இதில் பழனி​சாமி பேசி​ய​தாவது:முக்கிய கட்சிகள் இணையும் அதி​முக​வுடன் பல்​வேறு கட்​சிகள் கூட்​ட​ணி​யில் உள்​ளன. விரை​வில் முக்​கிய கட்​சிகள் இந்​தக் கூட்​ட​ணி​யில் இணைய உள்​ளன.

திமுக தலை​வர் ஸ்டா​லின் செல்​லும் இடங்​களில் எல்​லாம், வரும் சட்​டப்​பேரவை தேர்​தலில் 200 இடங்​களில் திமுக கூட்​டணி வெற்​றி​பெறும் என்று கூறிவரு​கிறார். அவர் பகல் கனவு காண்​கிறார். மக்​கள் ஆதர​வுடன் வெற்றி பெற்​று, அதி​முக மீண்​டும் ஆட்சி அமைக்​கும்.

தமிழகத்​தில் கடந்த அதி​முக ஆட்​சி​யில் கொண்டு வந்த திட்​டங்​களை, திமுக அரசு முடக்கி உள்​ளது. திமுக அரசு இது​வரை எந்த திட்​டத்​தை​யும் புதி​தாக கொண்​டு​வர​வில்​லை. ஏற்​கெனவே அதி​முக அறி​வித்த திட்​டங்​களை ஸ்டிக்​கர் ஒட்டி செயல்​படுத்தி வரு​கிறது. தமிழகத்​தில் ஊழலும், முறை​கேடு​களும் அதி​கரித்​துள்​ளன. 2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தலை மனதில் கொண்​டு, அதி​முக​வினர் சுறுசுறுப்​பாகச் செயல்பட வேண்​டும். இவ்​வாறு அவர் பேசி​னார். முன்​னாள் அமைச்​சர்​கள் கே.சி.வீரமணி, சி.​வி.சண்​முகம் உள்​ளிட்​டோர் உடனிருந்​தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x