Published : 09 Jun 2025 05:21 AM
Last Updated : 09 Jun 2025 05:21 AM

மீனாட்சி அம்மன் கோயிலில் அமித்ஷா தரிசனம்: 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நேற்று காலை தரிசனம் செய்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு திருநீறு பூசும் சிவாச்சாரியார்.

மதுரை: ​பாஜக மாநில நிர்​வாகி​கள் கூட்​டத்​தில் பங்​கேற்க வந்த மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித்​ஷா, மதுரை மீனாட்சி அம்​மன் கோயி​லில் சுவாமி தரிசனம் செய்​தார். மதுரை ஒத்​தக்​கடை​யில் நேற்று நடை​பெற்ற பாஜக மாநில நிர்​வாகி​கள் ஆலோ​சனைக் கூட்​டத்​தில் பங்​கேற்​ப​தற்​காக மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித்ஷா நேற்று முன்​தினம் இரவு டெல்​லியி​லிருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலை​யத்​துக்கு வந்​தார். பின்​னர், சிந்​தாமணி​யில் உள்ள தனி​யார் ஹோட்​டலில் தங்​கி​னார்.

இந்​நிலை​யில், நேற்று காலை 11.52 மணிக்கு மதுரை மீனாட்சி அம்​மன் கோயிலுக்கு வந்​தார். கிழக்கு கோபுர வாசல் அருகே கோயிலுக்​குள் சென்ற அமித்​ஷாவை கோயில் நிர்​வாகம் சார்​பில் அறங்​காவலர் குழுத் தலை​வர் ருக்​மணி பழனிவேல்​ராஜன், இணை ஆணை​யர் கிருஷ்ணன் ஆகியோர் வரவேற்​றனர். சிவாச்​சா​ரி​யார்​கள் பூரண கும்ப மரி​யாதை அளித்​தனர்.

பின்​னர் கோயிலுக்​குள் சென்ற மத்​திய அமைச்​சர், அம்​மன் சந்​நி​தி, சுவாமி சந்​நி​தி, முக்​குறுணி விநாயகர், விபூதி விநாயகரை தரிசனம் செய்​தார். உச்​சி​கால பூஜை​யில் பங்​கேற்ற பிறகு 12.22 மணி​யள​வில் கோயி​லில் இருந்து வெளியே வந்​து, அங்​கிருந்த பொது​மக்​களை பார்த்து கையசைத்து மகிழ்ச்​சியை வெளிப்​படுத்​தி​னார். அவருடன் பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன் ஆகியோ​ரும் வந்​தனர்.

உள்​துறை அமைச்​சரின் வரு​கை​யையொட்டி மீனாட்சி அம்​மன் கோயில் பகு​தி​யில் 5 அடுக்கு பாது​காப்பு ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டிருந்​தன. அவரது வரு​கைக்கு ஒரு மணி நேரத்​துக்கு முன்​பிருந்தே பக்​தர்​கள் யாரை​யும் கோயிலுக்​குள் அனு​ம​திக்​க​வில்​லை.

அமித்ஷாவுக்கு புத்தகம் வழங்கிய மதுரை ஆதீனம் ஹரிஹர தேசிக
ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள்.படங்கள்: நா.தங்கரத்தினம்

மதுரை ஆதீனம் மனு... மீனாட்சி அம்​மன் கோயிலுக்​குச் செல்​லும் வழி​யில் மதுரை ஆதீன மடம் முன் நின்​றிருந்த ஆதீன மடத்​தின் பீடா​திபதி ஹரிஹர ஞானசம்​பந்த தேசிக பரமாச்​சா​ரிய சுவாமிகளை பார்த்த மத்​திய அமைச்​சர் அமித்​ஷா, காரை நிறுத்தி கீழே இறங்​கி​னார். அவருக்கு மதுரை ஆதீனம் சால்வை அணி​வித்​து, புத்​தகம், கோரிக்கை மனு வழங்​கி​னார்.

பின்​னர் மதுரை ஆதீனம் செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, “மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித்​ஷாவை வரவேற்​றது மகிழ்ச்சி அளிக்​கிறது. அமித்​ஷா​விடம் மனு அளித்​தேன். அதில், கச்​சத்​தீவை மீட்​டு, இந்​தி​யா​வுடன் சேர்க்க வேண்​டும். இந்​திய மீனவர்​கள் தாக்​கப்​ப​டா​மல் இருக்​க​வும், மீனவர்​கள் பிரச்​சினையைத் தீர்க்​க​வும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்று கோரிக்கை விடுத்​துள்​ளேன்” என்​றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x