Last Updated : 07 Jun, 2025 05:16 PM

 

Published : 07 Jun 2025 05:16 PM
Last Updated : 07 Jun 2025 05:16 PM

கிளாட் தேர்வில் முதலிடம் பிடித்த பழங்குடியின மாணவருக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயில தகுதி பெற்ற முதல் பழங்குடியின மாணவர் பரத்துக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திருச்சி பச்சமலை தோனூர் மலை கிராமத்தைச் சேர்ந்த மலைவாழ் மாணவர் பரத், பொது சட்ட நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். பச்சமலைப் பகுதியில் கிளாட் (CLAT) தேர்வில் தேர்ச்சி பெற்று, தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலை.யில் உயர்கல்வி பயில தகுதி பெறும் முதல் பழங்குடியின மாணவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் இது குறித்து தனது எக்ஸ் தளத்தில், “உள்ளம் உவகையில் நிறைகிறது. தம்பி பரத் சட்டம் பயின்று தன் அறிவொளியை இந்தச் சமூகத்துக்கு வழங்கிட வேண்டும் என வாழ்த்துகிறேன். அவரது சட்டப் படிப்புக்கு திமுக சட்டத்துறையும் - அதன் செயலாளர் இளங்கோவனும் துணை நின்று அவரை வழிநடத்துவார்கள்!” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x