

நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரின் கடைசி நாளில், பேரவை விதி-110-ன் கீழ் 106 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் உள்ளிட்ட 4 புதிய அறிவிப்புகளை முதல்வர் ஜெய லலிதா வெளியிட்டார். அவற்றில், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 16 வித பரிசுப் பொருட்கள் கொண்ட ‘அம்மா பரிசுப் பெட்டகம்‘ வழங்கப்படும் என்ற அறிவிப்பு, எம்.எல்.ஏ-க்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
இதுபோன்ற சமயங்களில் பெரும்பாலும் அமைதியாக இருக்கும் மார்க்சிஸ்ட் கட்சியினர் அன்று தங்களது மகிழ்ச்சியை பல்வேறு விதங்களில் வெளிப்படுத்தினர். அவர்களில் மூத்த உறுப்பினர்கள் சிலர் மேசையை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பாலபாரதி உள்ளிட்ட சிலர் ஒருபடி மேலே போய், எழுந்து நின்று முதல்வரைப் பார்த்து இருகரம் கூப்பி நன்றி தெரிவித்தனர்.
-எஸ்.சசிதரன்