Published : 30 May 2025 03:11 PM
Last Updated : 30 May 2025 03:11 PM
சென்னை: மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்கள் ஜூன் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம், என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களைத் தேர்வுக் குழு மூலம் தேர்வு செய்து, தேர்வு செய்யப்படும் விருதாளர்களுக்கு தமிழக முதல்வர் விருது வழங்கி ஊக்குவித்து கவுரவிக்கப்படுவதால், தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாற்றுத்திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணிபுரிபவர்கள், மேலும் சிறப்பாக பணிபுரிய வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும் பொருட்டு, கீழ்காணும் விருதுகள் 15 ஆகஸ்ட் 2025 சுதந்திர தின விழா அன்று வழங்கப்படவுள்ளன.
> விருதின் வகையும், விவரங்களும்:
மேற்காணும் விருதுகளுக்கு விண்ணப்பிக்கும் விருதாளர்கள், , “https://awards.tn.gov.in”என்ற வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள படிவத்தில் விவரங்களை பதிவு செய்தும், கோரப்பட்ட விவரங்களை இணைத்தும் ஜூன் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். வலைத்தளத்தில் விண்ணப்பிக்காத விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
மேலும், விண்ணப்பத்தின் இரண்டு நகல்களை ஜூன் 30ம் தேதி அன்று மாலை 5 மணிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், மேற்படி விருதுக்கான தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வுக் குழுவினரால் தெரிவு செய்யப்பட்டு, தேர்வு செய்யப்படும் விருதாளர்களுக்கு, சுதந்திர தின விழா நிகழ்வில் முதல்வரால் மாநில விருதுகள் வழங்கப்படும், என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT