அவதூறு பரப்பிய எதிர்க்கட்சியினரின் எண்ணங்கள் தவிடுபொடி: முதல்வர் ஸ்டாலின் கருத்து

அவதூறு பரப்பிய எதிர்க்கட்சியினரின் எண்ணங்கள் தவிடுபொடி: முதல்வர் ஸ்டாலின் கருத்து
Updated on
2 min read

சென்னை: அண்ணா பல்​கலைக்​கழக மாணவி பாலியல் வழக்கு தீர்ப்பை சுட்​டிக்​காட்​டி, அவதூறுகளை அள்​ளித் தெளித்த எதிர்க்​கட்​சி​யினரின் எண்​ணம் தவிடு​பொடி​யான​தாக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தெரி​வித்​துள்​ளார்.

சென்​னை, அண்ணா பல்​கலைக்​கழக மாணவி பாலியல் துன்​புறுத்​தலுக்கு உள்​ளான வழக்​கில், கைதாகி சிறை​யில் உள்ள ஞான​சேகரன் குற்​ற​வாளி என சென்னை மகளிர் நீதி​மன்ற நீதிபதி ராஜலட்​சுமி நேற்று தீர்ப்​பளித்​தார். ஞான​சேகரனுக்​கான தண்​டனையை வரும் ஜூன் 2-ம் தேதி அறி​விப்​ப​தாக தெரி​வித்​துள்​ளார். இந்​நிலை​யில், நீதி​மன்​றத்​தின் தீர்ப்​புக்கு ஆதர​வாக பல்​வேறு தரப்​பினரும் கருத்​துகளை தெரி​வித்து வரு​கின்​றனர்.

இதுகுறித்து முதல்​வர் மு.க.ஸ்​டாலின் வெளி​யிட்ட சமூக வலை​தளப்​ப​தி​வு: சென்னை மாணவிக்கு இழைக்​கப்​பட்ட அநீ​திக்கு எதி​ராக வழக்​கைத் துரித​மாக நடத்​தி, ஐந்தே மாதத்​தில் நீதியை பெற்​றுத் தந்​துள்​ளது நமது காவல்​துறை. விசா​ரணை அதி​காரி​களுக்​கும் அரசு வழக்​கறிஞர்​களுக்​கும் நீதி​மன்​றத்​துக்​கும் நன்​றி. காவல் துறை​யினரிடம் நான் தொடர்ந்து கூறு​வது, ‘குற்​றம் நடக்​கக்​கூ​டாது. நடந்​தால் எந்​தக் குற்​ற​வாளி​யும் தப்​பக்​கூ​டாது. விசா​ரணை​யைத் துரித​மாக நடத்தி தண்​டனை பெற்​றுத்தர வேண்​டும்’’ என்​பது​தான்.

குற்​றங்​களின் கூடார​மாக அன்று அரசை நடத்தி இன்று அவதூறுகளை அள்​ளித் தெளித்​து, மலி​வான அரசி​யல் செய்ய துடித்த எதிர்க்​கட்​சி​யினரின் எண்​ணத்தை தவிடு பொடி​யாக்கி உள்​ளோம். சட்​டநீ​தி​யை​யும், பெண்​கள் பாது​காப்​பை​யும் எந்​நாளும் உறுதி செய்​வோம். இவ்​வாறு முதல்​வர்​ தெரி​வித்​துள்​ளார்​.

கனி​மொழி பெருமிதம்: திமுக துணை பொதுச்​செய​லா​ளர் கனி​மொழி எம்​.பி. நேற்று வெளி​யிட்ட அறிக்​கை: அண்ணா பல்​கலைக்​கழக மாணவி பாலியல் வழக்​கில் கைதான ஞான​சேகரன் மீது சுமத்​தப்​பட்ட 12 குற்​றச்​சாட்​டு​களில், 11 குற்​றச்​சாட்​டு​கள் நிரூபண​மாகி உள்​ள​தாக சென்னை மகளிர் நீதி​மன்​றம் தீர்ப்பு அளித்​திருக்​கிறது.

சம்​பவம் நடந்த நாளி​லிருந்து சரி​யாக 157-ஆவது நாளில் குற்​ற​வாளி​யின் தண்​டனையை உறுதி செய்​திருக்​கிறது காவல் துறை. சிபிஐ கூட இவ்​வளவு துரித​மாக விசா​ரித்​திருக்க முடி​யுமா எனக் கேட்​கும் அளவுக்கு தமிழகக் காவல் துறை மிகச்​சிறப்​பாக வழக்கை நடத்தி குற்​ற​வாளி​யின் குற்​றத்தை நிரூபித்​திருக்​கிறது. அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் தீர்ப்பு வெளியாவதற்கு 15 நாட்களுக்கு முன்புதான், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்குச் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

அந்த வழக்கோடு அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். பழனி​சாமி ஆட்​சி​யில், பொள்​ளாச்சி பாலியல் குற்​றச்​சம்​பவம் கடந்த 2016 முதல் 2018-ம் ஆண்டு வரை நடை​பெற்​றாலும், 2019-ம் ஆண்​டு​தான் வெளிச்​சத்​துக்கு வந்​தது. அன்று திமுக உள்​ளிட்ட எதிர்க்​கட்​சிகள், ஊடகங்​களும் அந்த வழக்கை வெளிக் கொண​ராமல் போயிருந்​தால், பழனி​சாமி அரசு மூடி மறைத்​திருக்​கும்.

அ​தி​முக​வினர் சம்​பந்​தப்​பட்​டிருந்​த​தால் வழக்​கைப் பதி​யாமல் இழுத்​தடித்​ததுடன் பாதிக்​கப்​பட்ட மாண​வி​யின் அண்​ணனையே தாக்க முயன்​றனர். கடந்த 2019 பிப்​ர​வரி தொடங்கி 2025 மே மாதம் வரை ஆறரை ஆண்​டு​கள் பொள்​ளாச்சி பாலியல் வழக்கு நடை​பெற்​றது. ஆனால், அண்ணா பல்​கலைக்​கழக வழக்கை விசா​ரித்​தது தமிழக காவல் துறை, 157 நாளில் தீர்ப்பை பெற்​றுக் கொடுத்​திருக்​கிறது. இவ்​வாறு கூறியுள்​ளார்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in