பரம்பொருள் அறக்கட்டளையை மூடுவதாக அறிவிப்பு

பரம்பொருள் அறக்கட்டளையை மூடுவதாக அறிவிப்பு
Updated on
1 min read

திருப்பூர்: ஆன்மிக பேச்சாளர் மகாவிஷ்ணு, தான் திருப்பூரை தலைமையகமாக கொண்டு நடத்தி வந்த பரம்பொருள் அறக்கட்டளையை மூடுவதாக அறிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி குளத்துப்பாளையத்தை தலைமையகமாகக் கொண்டு, பரம்பொருள் அறக்கட்டளையை நடத்தி வருபவர் ஆன்மிக பேச்சாளா் மகாவிஷ்ணு. பல்வேறு நாடுகளில் இவரது பரம்பொருள் அறக்கட்டளைக்கு கிளைகள் உள்ளன.

இவர் சென்னை அரசுப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் குறித்தும், முன்ஜென்மம் குறித்தும் பேசியது சா்ச்சையை ஏற்படுத்தியது. இதனால், மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டார். மகாவிஷ்ணு பிணையில் வந்த நிலையில், தான் நடத்தி வந்த பரம்பொருள் அறக்கட்டளை மூடுவதாகவும், இதனை அறிவிக்கும் போது நிம்மதியாக உணர்வதாகவும், தனக்கு எந்தவித வேதனையும் கொண்ட முடிவாக இது இல்லை எனவும் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் அறக்கட்டளைக்கு என யாரும் பணம் அனுப்ப வேண்டாம். இதுவரை பெற்ற நன்கொடைகள் மூலம் அன்னதானம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு கணக்குகள் முடிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து எனது ஆன்மீகப் பணியை வேறு வகையில் தொடர உள்ளேன். இனி அறக்கட்டளை இயங்காது. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in