Published : 27 Jul 2018 08:19 AM
Last Updated : 27 Jul 2018 08:19 AM

ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் அமைக்கப்படும் விசாரணை ஆணையங்கள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்: சென்னை உயர் நீதிமன்றம் கருத்து

ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமை யிலான ஆணையங்கள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர் என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

கடந்த 2006 - 2011 திமுக ஆட்சியில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப் பட்டது. 2011-ல் அதிமுக ஆட்சி பொறுப்பேற்றதும் இந்தக் கட் டிடம் அரசு பல்நோக்கு மருத்துவ மனையாக மாற்றப்பட்டது.

மேலும், இந்த கட்டுமானத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந் துள்ளதாகக் கூறி உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.ரகுபதி தலைமையில் ஒருநபர் விசா ரணை ஆணையம் அமைத்து அப் போதைய முதல்வர் ஜெய லலிதா உத்தரவிட்டார். அதன்பின் முன்னாள் முதல்வர் கருணாநிதி உள்ளிட்டோருக்கு ஆணையத் தின் சார்பில் நோட்டீஸ் அனுப்பப் பட்டது.

இந்த நோட்டீஸை எதிர்த் தும், நீதிபதி ஆர்.ரகுபதி தலை மையிலான ஆணையத்துக்கு தடை விதிக்கக் கோரியும் கருணாநிதி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் கடந்த 2015-ம் ஆண்டில் ரகுபதி ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிர மணியம் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி, ‘‘இந்த ஆணையத்துக்கு தடைவிதித்து 3 ஆண்டுகளாகி விட்டது. இன் னும் எதற்காக இந்த ஆணை யத்தை கலைக்காமல் நிதி ஒதுக் கீடு செய்யப்பட்டு வருகிறது. ஒன்று தடையை நீக்கக் கோரி தமிழக அரசு மனு தாக்கல் செய் திருக்க வேண்டும். இல்லையென் றால் ஆணையத்தை முடக்கியா வது வைத்திருக்க வேண்டும். இரண்டையுமே செய்யாததால் அந்த ஊழல் நடவடிக்கையையும் அரசு நீர்த்துப்போகச் செய்து விட்டது.

முறைகேடு தொடர்பான புகார்களை விசாரிக்க லஞ்ச ஒழிப்பு போலீஸார் இருக்கும்போது இதுபோன்ற ஆணையங்கள் தேவையில்லை. இதுபோன்று ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலை மையில் அமைக்கப்படும் விசா ரணை ஆணையங்கள் மீதான நம்பிக்கையை பொதுமக்கள் இழந்துவிட்டனர். வெறும் கண்துடைப்பு நடவடிக்கையாகவே இதுபோன்ற ஆணையங்களை அரசு அமைக்கிறது. இதனால் மக்களின் வரிப்பணம் வீணடிக் கப்படுகிறது’’ என வேதனை தெரிவித்தார்.

மேலும். தற்போது வரை ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமை யில் எத்தனை விசாரணை ஆணை யங்கள் அமைக்கப்பட்டுள்ளன, அவற்றின் தற்போதைய செயல்பாடு என்ன, அந்த ஆணையங்கள் அமைக்கப்பட்ட தன் நோக்கம் நிறைவேறி விட்டதா, அவற்றுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, என்னென்ன வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன, அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு என்ன பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, எத்தனை வாகனங்கள் தரப்பட்டுள்ளன என்ற கேள்விகளுக்கு பிற்பகலில் அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதி கூறினார்.

அதன்படி, அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் பிற்பகலில் ஆஜராகி, இது தொடர்பாக பதிலளிக்க அவகாசம் தேவை என்றார். அதையடுத்து நீதிபதி, இந்த வழக்கு விசாரணையை வரும் ஆகஸ்ட் 1-ம் தேதிக்கு தள்ளிவைத்தார். அன்றைய தினம் விசாரணை ஆணையங்கள் அமைக்கப்படுவது தொடர்பாக வழிகாட்டு நெறி முறைகள் வகுக்கப்படும் எனவும் நீதிபதி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x