வீடுகள், ஆலைகளில் ஒயரிங் பணி முடிந்ததும் சோதனை அறிக்கை பெறுவது கட்டாயம்: மின்சார ஒழுங்குமுறை ஆணையம்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: வீடுகள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட இடங்களில் ஒயரிங் பணிகள் முடிவடைந்ததும் விதிகளுக்கு உட்பட்டு செய்யப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்ய அங்கீகரிக்கப்பட்ட ஒயரிங் ஒப்பந்ததாரர்களிடம் இருந்து சோதனை அறிக்கை கட்டாயம் வாங்குமாறு மின்வாரியத்துக்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் வீடுகள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவைகளின் கட்டுமானம் நடைபெறும் போது, ஒயரிங் தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இப்பணிகளை விபத்து ஏற்படாமல் எப்படி செய்ய வேண்டும் என்பதற்கான விதிமுறைகளை, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உருவாக்கியுள்ளது. இதன்படி, ஒயரிங் பணிகள் முடிவடைந்ததும் விதிகளுக்கு உட்பட்டு செய்யப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்ய அங்கீகரிக்கப்பட்ட ஒயரிங் ஒப்பந்ததாரர்களிடம் இருந்து சோதனை அறிக்கை கட்டாயம் வாங்குமாறு மின்வாரியத்துக்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், இந்த அறிக்கையை எந்த ஒரு நிலையிலும் தேவைப்படும் பட்சத்தில் சமர்ப்பிக்க தயாராக இருக்கும்படியும் தெரிவித்துள்ளது. இதனால், மின்விபத்து ஏற்படும் போது சான்றளித்தது யார் என்பதை கண்டறிய முடியும். இதனால், சான்று வழங்குபவர் பொறுப்புடன் செயல்படுவார் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in