முதல்வரின் பயணம் குறித்து பழனிசாமி கடும் விமர்சனம்

முதல்வரின் பயணம் குறித்து பழனிசாமி கடும் விமர்சனம்
Updated on
1 min read

சென்னை: தமிழக முதல்வரின் நிதி ஆயோக் கூட்டத்துக்கான டெல்லி பயணம் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: "மத்திய அரசு தமிழகத்தை புறக்கணிப்பதால் நிதி ஆயோக் கூட்டத்தை நான் புறக்கணிக்கிறேன்" என்று வீராவேசமாக பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போது நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லிக்கு பறக்கிறாராம்.

தமிழக மக்களுக்கு ஒரு தேவை என்றால் போகாதவர், தன் குடும்பத்துக்கு ஒரு தேவை என்றதும் செல்கிறார். அன்று 2ஜி-க்காக அப்பா டெல்லி சென்றார். இன்று டாஸ்மாக்... தியாகி... தம்பி... வெள்ளைக் குடைக்கு வேலை வந்துவிட்டதோ. எல்லாம் "தம்பி" படுத்தும் பாடு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in