ரூ.468 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்: புதிய கட்டிடங்கள் திறப்பு

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.527 கோடியே 84 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 4,978 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக நேற்று திறந்து வைத்தார்.  உடன் அமைச்சர்கள் க.முத்துசாமி, தா.மோ.அன்பரசன், தலைமைச்செயலாளர் நா.முருகானந்தம் உள்ளிட்டோர்.
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.527 கோடியே 84 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 4,978 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக நேற்று திறந்து வைத்தார். உடன் அமைச்சர்கள் க.முத்துசாமி, தா.மோ.அன்பரசன், தலைமைச்செயலாளர் நா.முருகானந்தம் உள்ளிட்டோர்.
Updated on
2 min read

சென்னை: சென்னை பெருநகர வளர்ச்​சிக் குழு​மம் மற்​றும் தமிழ்​நாடு நகர்ப்​புற வாழ்​விட மேம்​பாட்டு வாரி​யம், வீட்​டு​வசதி வாரியம், உயர் கல்வி துறையில் ரூ.870.60 கோடி​யில் கட்​டப்​பட்​டுள்ள குடி​யிருப்​பு​கள், கட்​டிடங்​களை திறந்து வைத்த முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், ரூ.468.42 கோடி மதிப்​பிலான திட்​டங்​களுக்கு அடிக்​கல் நாட்​டி​னார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: வீட்​டு​வசதி மற்​றும் நகர்ப்​புற வளர்ச்​சித் துறை​யின்​கீழ் செயல்​படும் தமிழ்​நாடு நகர்ப்​புற வாழ்​விட மேம்​பாட்டு வாரி​யத்​தின் சார்​பில் சென்னை கைலாசபுரம் திட்​டப்​பகு​தி, விருதுநகர்- சம்​பந்​த​புரம், மதுரை - உச்​சபட்டி , புதுக்​கோட்​டை- சந்​தைப்​பேட்​டை, கள்​ளக்​குறிச்சி - கீரணூர்​-2, திருப்​பூர் - ஹைடெக் பார்க் நகர், காம​ராஜர்​நகர் பெருந்​தொழு​வு, காஞ்​சிபுரம் - சாலமங்​கலம்​-1, கடலூர் - கீழகுப்​பம்-1 மற்​றும் 2, பாலக்​கொல்​லை, திரு​வ​தி​கை, ஈரோடு- கவுந்​தப்​பாடி, திரு​வாரூர்- கண்​டிதம்​பேட்​டை, கரூர்​-வேலம்​பாடி திட்​டப்​பகு​தி​களில் ரூ.527.84 கோடி​யில் கட்​டப்​பட்​டுள்ள 4,978 புதிய அடுக்​கு​மாடி குடி​யிருப்​பு​களை தலை​மைச் செயல​கத்​தில் இருந்து காணொலி மூலம் முதல்​வர் ஸ்​டா​லின் திறந்து வைத்​தார்.

இதேபோல் ரூ.207.90 கோடி​யில் கட்​டப்​பட்ட வணிக வளாகங்​களை முதல்​வர் திறந்து வைத்​தார். மேலும், 4 இடங்​களில் திறந்​தவெளி விளை​யாட்டு மைதானங்​கள், நவீன உடற்​ப​யிற்சி பூங்​காக்​கள் என ரூ.14.66 கோடி​யில் முடிவுற்ற திட்​டப் பணி​களை முதல்​வர் திறந்து வைத்​தார். இதுத​விர, சென்​னை​யில் பல்​வேறு பகு​தி​களில் ரூ.255.60 கோடி​யில் 20 புதிய திட்​டப்​பணி​களுக்கு அடிக்​கல் நாட்​டி​னார்.

நிகழ்​வில், அமைச்​சர்​கள் சு.​முத்​து​சாமி, தா.மோ.அன்​பரசன், பி.கே.சேகர்​பாபு, தலை​மைச் செயலர் நா.​முரு​கானந்​தம், வீட்​டு​வச​தித்​துறை செயலர் காகர்​லாஉஷா, சிஎம்​டிஏ முதன்மை செயல் அலு​வலர் சிவ​ஞானம், தமிழ்​நாடு வீட்​டு​வசதி வாரிய தலை​வர் பூச்சி எஸ்​.​முரு​கன், தமிழ்​நாடு நகர்ப்​புற வாழ்​விட மேம்​பாட்டு வாரிய மேலாண்மை இயக்​குநர் அன்​சுல் மிஸ்​ரா, வாரிய இணை மேலாண்மை இயக்​குநர் க.விஜய​கார்த்​தி​கேயன், தமிழ்​நாடு வீட்​டு​வசதி வாரி​யத்​தின் மேலாண்​மை இயக்​குநர்​ ஜி.எஸ்​.சமீரன்​ உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​.

மாணவிகளுடன் கலந்துரையாடல்: இதனிடையே சென்னை ராணி மேரி கல்​லூரி​யில் ரூ.42 கோடி​யில் விடு​திக் கட்​டிடம் உட்பட உயர்​கல்​வித் துறை சார்​பில் ரூ.120.02 கோடி மதிப்​பிலான கட்​டிடங்​களை திறந்து வைத்த முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், ரூ.207.82 கோடி​யில் கட்​டப்பட உள்ள கட்​டிடங்​களுக்கு அடிக்​கல் நாட்​டி​னார்.

முதல்​வ​ரால் நேற்று திறக்​கப்​பட்ட, அடிக்​கல் நாட்​டப்​பட்ட கட்​டிடங்​களுக்கு பெருந்​தலை​வர் காம​ராஜர் கல்​லூரி மேம்​பாட்​டுத் திட்​டத்​தின்​கீழ் ரூ.269.52 கோடி நிதி ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது. சென்னை ராணி மேரி கல்​லூரி​யில் ரூ.42 கோடி​யில் நவீன வசதி​களு​டன் 455 மாண​வியர் தங்​கிப் படிக்​கும் வகை​யில் கட்​டப்​பட்​டுள்ள விடு​திக் கட்​டிடத்தை நேற்று முதல்​வர் திறந்து வைத்து பார்​வை​யிட்​டதுடன் மாண​வியருடன் கலந்​துரை​யாடி​னார்.

மேலும் தமிழகம் முழுவதும் அரசு பொறி​யியல், தொழில்​நுட்​பக் கல்​லூரி மற்​றும் அரசு பாலிடெக்​னிக், அரசு கலை மற்​றும் அறி​வியல் கல்​லூரிகளில் ரூ.120 கோடியே 2 லட்​சத்து 80 ஆயிரம் செல​வில் கட்டி முடிக்​கப்​பட்ட கட்​டிடங்​களை முதல்​வர் திறந்​தார். அதே​போல் பல்வேறு அரசு கல்லூரிகளில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்.

இவற்​றின் மொத்த மதிப்பு ரூ.207 கோடியே 82 லட்​சத்து 47 ஆயிரம் ஆகும். மேலும், பி.​வில்​சன் எம்​.பி. தொகுதி மேம்​பாட்டு நிதியி​லிருந்து ரூ. 5 கோடி​யில் சென்னை ராணிமேரி கல்​லூரி வளாகத்​தில் கட்​டப்​பட​வுள்ள கலை​யரங்​கத்​துக்​கும் முதல்​வர் அடிக்​கல் நாட்​டி​னார்.

ராணி மேரி கல்​லூரி வளாகத்​தில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் அமைச்​சர்​கள் சு.​முத்​து​சாமி, கோவி.செழியன், எம்​.பி.க்​கள் வில்​சன், தமிழச்சி தங்​க​பாண்​டியன், உயர்​கல்​வித் துறை செயலர் சி.சமயமூர்த்​தி, கல்​லூரி கல்வி ஆணை​யர் எ.சுந்​தர​வல்​லி, தொழில்​நுட்​பக் கல்வி ஆணை​யர் ஜெ.இன்​னசன்ட் திவ்​யா, ராணி மேரி கல்​லூரி முதல்​வர்​ பி. உமா மகேஸ்​வரி உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in