பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நியாயமான தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியுள்ளது: வழக்கறிஞர் சுரேந்​திர மோகன் பெருமிதம்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நியாயமான தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியுள்ளது: வழக்கறிஞர் சுரேந்​திர மோகன் பெருமிதம்
Updated on
1 min read

கோவை: பொள்​ளாச்சி பாலியல் வழக்​கில் நியாய​மான தீர்ப்பு வழங்​கப்​பட்​டுள்​ள​தாக சிபிஐ தரப்பு வழக்​கறிஞர் சுரேந்​திர மோகன் கூறி​னார். கோவை​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: இந்த வழக்​கில் 376டி (கூட்டு பாலியல் வன்​கொடுமை) மற்​றும் 376 (2)என் (தொடர்ச்​சி​யாக பாலியல் வன்​கொடுமை புரிதல்) ஆகிய பிரிவு​களில் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்​யப்​பட்​டு, தண்​டனை வழங்​கப்​பட்​டுள்​ளது. சிபிஐ முயற்சி வீண் போக​வில்​லை.

பாதிக்​கப்​பட்ட பெண்​கள், வழக்​கின் தன்​மை, பாதிப்பு ஆகிய​வற்றை கருத்​தில் கொண்​டு, நீதி​மன்​றம் நியாய​மானத் தீர்ப்பு வழங்​கி​யுள்​ளது. இவ்​வழக்​கில் அழிக்​கப்​பட்ட சில மின்​னணு ஆவணங்​கள் தொழில்​நுட்ப வல்​லுநர்​களால் மீட்​டெடுக்​கப்​பட்​டன. சாட்​சிகள் சிபிஐ தனிக் குழுக்​கள் மூலம் ரகசி​ய​மாக விசா​ரிக்​கப்​பட்​டனர்​.உயர்​நீ​தி​மன்ற உத்​தர​வின்​படி 8 வழக்​கு​கள் ஒன்​றாக விசா​ரிக்​கப்​பட்​டன. வழக்​கில் விசா​ரிக்​கப்​பட்ட 48 சாட்​சி​யங்​களில் யாரும் பிறழ் சாட்​சி​யாக மாற​வில்​லை.

விஞ்​ஞானபூர்​வ​மாக அடை​யாளம் காணுதல் உள்​ளிட்​ட​வற்​றுக்கு தொழில்​நுட்​பம் உறு​துணை​யாக இருந்​தது. உச்ச நீதி​மன்​றத்​தில் மகேந்​திர சாவ்லா மற்​றும் நிர்​பயா வழக்கு உட்பட பல்​வேறு வழக்​கு​களை முன்​னு​தா​ரண​மாக காட்டி இந்த தீர்ப்பு வழங்​கப்​பட்​டுள்​ளது. மேல்​முறை​யீடு சென்​றாலும் தண்​டனை நிலைநிறுத்​தப்​படும். இவ்​வாறு அவர் கூறி​னார்.

ஆதா​ரங்​கள் திருப்​தி... கோவை மகளிர் நீதி​மன்​றத்​தின் அரசு வழக்​கறிஞர் ஜிஷா கூறும்​போது, “சிபிஐ தரப்​பில் சமர்ப்​பிக்​கப்​பட்ட அனைத்து ஆதா​ரங்​களை​யும் நீதி​மன்​றம் திருப்​தி​கர​மாக ஏற்​றுக்​கொண்​டது. நீண்ட விசா​ரணை என்​பது தவறானது. 2019-ல் வழக்கு பதிவு செய்​யப்​பட்​டு, தொடர்ந்து விசா​ரணை நடத்​தப்​பட்​டு, குற்​றப்​பத்​திரிகை தாக்​கல் செய்​யப்​பட்​டது. ஒரு​வர்​கூட பிறழ் சாட்சி அளிக்​க​வில்​லை. பாதிக்​கப்​பட்​ட​வர்​களின் விவரம் வெளியே தெரி​யாமல் பாது​காக்​கப்​பட்​டது. சிபிஐ சிறப்​பாக விசா​ரணை நடத்தி​யது” என்றார்.

மேல்​முறை​யீடு செய்​வோம்​... எதிர்​தரப்​பைச் சேர்ந்த வழக்​கறிஞர் பாண்​டிய​ராஜ் கூறும்​போது, “கைது செய்​யப்​பட்​ட​வர்​களின் வயது, உடல்​நிலை, அவர்​களது வயதான பெற்​றோர் போன்​றவற்றை குறிப்​பிட்​டு, தண்​டனையை குறைக்க வலி​யுறுத்​தினோம். நேரடி சாட்​சிகள் எது​வும் இல்லை என்​றும் வலி​யுறுத்தினோம்.
கைதானவர்​கள் மீது வேறு வழக்​கு​கள் இல்​லை, முக்​கியக் குற்​ற​வாளி​களை தப்ப விட்​டுள்​ளனர் உள்​ளிட்​ட​வற்​றை​யும் தெரி​வித்​தோம். தீர்ப்​பின் நகலைப் படித்​து​விட்​டு, சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​வோம்” என்​றார்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in