புறம்போக்கு நிலத்துக்கு பட்டா: தாம்பரம், வண்டலூரில் வசூல் வேட்டை

புறம்போக்கு நிலத்துக்கு பட்டா: தாம்பரம், வண்டலூரில் வசூல் வேட்டை
Updated on
2 min read

​தாம்​பரம், வண்​டலூர் வட்​டத்​தில் புறம்​போக்கு நிலங்​களில் வசிப்​போரிடம் பட்டா பெற்​றுத் தரு​வ​தாக கூறி வசூல் நடை​பெறு​வ​தாக​வும், அப்​பாவி மக்​களை மோசடி செய்​வ​தாக​வும் புகார் எழுந்​துள்​ளது. சென்​னையை சுற்​றி​யுள்ள, 532 கிராமங்​களைச் சேர்ந்த, 29,187 குடும்​பங்​களுக்கு பட்டா வழங்​கப்​படும்; தமிழகத்​தின் பிற மாவட்​டங்​களில் ஆட்​சேபனையற்ற புறம்​போக்கு நிலங்​களில் வசிக்​கும் 57,084 குடும்​பங்​களுக்​கும் பட்டா வழங்​கப்​படும் என முதல்​வர் அண்​மை​யில் அறி​வித்​திருந்​தார். மேலும், இதனையொட்டி வழி​காட்டி விதி​கள், நடை​முறை​கள் குறித்த அரசாணை​யும் வெளி​யிடப்​பட்​டது.

அதன்​படி தரிசு நிலம், கல்​லான்​குத்​து, பாறை, கரடு, கிராம நத்​தம், அரசு நஞ்சை - புஞ்​சை, அரசு அனாதீனம், பொதுகல் வகை​பாட்டு நிலங்​களில் வசிப்​போர் பட்டா பெறலாம். வண்​டிப்​பாதை, பாதை, பாட்​டை, களம், மயானம், தோப்பு வகைப்​பாட்​டில் உள்ள நிலங்​களில் வசிப்​போர், வரன்​முறை அடிப்​படை​யில் பட்டா பெறலாம் என தெரிவிக்​கப்​பட்​டது.

அதே​போல் நீர்​நிலை, மேய்க்​கால், மந்​தவெளி உள்​ளிட்ட ஆட்​சேபகர​மான நிலங்​களில் வசிப்​போருக்கு பட்டா வழங்​கப்​ப​டாது என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. இந்​நிலை​யில் பட்டா வழங்​கப்​படும் என்​பதை பயன்​படுத்தி ஒருசில இடைத்​தரகர்​கள், உள்​ளாட்சி பிர​தி​நி​தி​கள், வரு​வாய்த் துறையைச் சேர்ந்த சிலருடன் இணைந்​து, 1 பட்​டாவுக்கு ரூ.5 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை வசூல் வேட்டை செய்​வ​தாக புகார் எழுந்​துள்​ளது.

இதுகுறித்து வரு​வாய்த்​துறை உயர் அதி​காரி ஒரு​வர் கூறிய​தாவது: யார், யாருக்கு பட்டா வழங்​கப்​படும் என அரசு தெளி​வாக வரையறை செய்து அரசாணை வெளி​யிடப்​பட்​டுள்​ளது. தான் வசிக்​கும் பகுதி எந்த நிலத்​தில் இருக்​கிறது என்​பதை பொது​மக்​கள் தெரிந்து கொள்ள வேண்​டுமெனில், அரு​கில் உள்ள கிராம நிர்​வாக அலு​வலரை அணுகி தெரிந்து கொள்​ளலாம். மேலும், பட்டா வழங்​கு​வது ஏற்​கெனவே கணக்​கெடுக்​கப்​பட்​டுள்​ளது; தொடர்ந்​தும் கணக்​கெடுப்பு செய்​யப்​பட்டு வரு​கிறது.

அரசு தெரி​வித்த விதி​களுக்கு உட்​பட்​டிருந்​தால் மட்​டுமே அவர்​களுக்கு பட்டா வழங்​கப்​படும் என்​பதை மக்​கள் புரிந்து கொள்ள வேண்​டும். எனவே, இது​போன்ற இடைத்​தரகர்​களை நம்பி பொது​மக்​கள் ஏமாற வேண்​டாம். பட்டா வழங்​கு​வது தொடர்​பாக வரு​வாய்த்​துறை ஒத்​துழைப்பு இல்லை எனில் வட்​டாட்​சி​யர், கோட்​டாட்​சி​யர், மாவட்ட வரு​வாய் அலு​வலர், ஆட்​சி​யர் ஆகியோரிடம் புகார் அளிக்​கலாம் என்​றார்.

இதுகுறித்து சமூக ஆர்​வலர் சண்​முக சுந்​தரம் கூறிய​தாவது: பட்டா பெறு​வதற்கு அனைத்து தகு​தி​களும் இருந்​தாலே எளி​தாக பட்டா கிடைத்​து​விடும். ஆனால், அரசு அதி​காரி​களை அணுக​வி​டா​மல் உள்​ளாட்சி பிர​தி​நி​தி​களும், அரசியல்வாதிகளும் இடையூறு செய்து பண வசூலில் ஈடு​படு​கின்​றனர். எனவே மாவட்ட நிர்​வாகம் இதில் கவனம் செலுத்த வேண்​டும். குறிப்​பாக வண்​டலூர், தாம்​பரம் வட்​டங்​களில் புறம்​போக்கு நிலங்​களில் ஏராள​மான மக்​கள் வசித்து வரு​கின்​றனர்.

இந்த மக்​களை குறி​வைத்து இடைத்​தரகர்​கள், ஆளுங்​கட்​சி​யினர், வரு​வாய்த்​துறையைச் சேர்ந்த சிலர் இணைந்து வசூல் வேட்​டை​யில் ஈடு​படு​கின்​றனர். இவற்றை மாவட்ட நிர்​வாகம் தடுத்து நிறுத்த வேண்​டும். பட்டா யாருக்கு கிடைக்​கும், யாருக்கு கிடைக்​காது என்ற போதிய விழிப்​புணர்வு இல்​லாததே இடைத்​தரகர்​களின் ஆதிக்​கம் அதி​கரிக்க காரண​மாக அமை​கிறது.

அனைத்து விஏஓ அலு​வல​கங்​கள், வரு​வாய் அலு​வலர் அலு​வல​கங்​கள், வட்​டாட்​சி​யர் அலு​வல​கங்​களில் அரசு இது குறித்து விளம்​பரப்​படுத்த வேண்​டும். அரசின் சாதனை​களை விளம்​பரப்​படுத்​து​வது​போல, பட்டா வழங்​கு​வதற்​கான நடை​முறை​களை பொது​மக்​கள் எளி​தாக தெரிந்து கொள்​ளும் வகை​யில் விழிப்​புணர்வு ஏற்​படுத்த வேண்​டும். பொது​மக்​கள் நலன் கருதி அரசு கொண்டு வந்த இந்த நல்ல திட்​டத்தை அடித்​தட்டு மக்​களுக்கு கிடைக்​கும் வகை​யில் ஆக்​கபூர்​வ​மான நடவடிக்​கைகளை மேற்​கொள்​ள வேண்​டும்​. இவ்​வாறு அவர்​ தெரிவித்​தார்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in