தமிழ் இணைய கல்வி கழகத்துக்கு 20 நாடுகளில் 79 தொடர்பு மையங்கள்: அமைச்சர் பிடிஆர் தகவல்

தமிழ் இணைய கல்வி கழகத்துக்கு 20 நாடுகளில் 79 தொடர்பு மையங்கள்: அமைச்சர் பிடிஆர் தகவல்
Updated on
1 min read

சென்னை: தகவல் தொழில்​நுட்​பத் துறை அமைச்​சர் பழனிவேல் தியாகராஜன் வெளி​யிட்ட அறிக்கை: இது​வரை ஒரு லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட மாணவர்​கள் தமிழ் இணை​யக் கல்விக்​கழகத்​தின் பல்​வேறு பாடத்​திட்​டங்​களில் சேர்ந்து பயின்று வரு​கின்​றனர். அதன் ஒரு பகு​தி​யான சான்​றிதழ் படிப்​பு​களில் 18,968 மாணவர்​கள் தேர்ச்சி பெற்​றுள்​ளனர்.

அதே​போல், தமிழியல் தொடர்​பான பட்​டயப்​படிப்​பில் 2,679 பேர், மேற்​பட்​டயப் படிப்​பில் 2,151 பேர், பட்​டப்​படிப்​பில் 1,906 பேர் தேர்ச்சி அடைந்​துள்​ளனர். அயலக மாணவர்​களுக்​குக் கற்​பிப்​ப​தற்​கான தமிழ் ஆசிரியர் பட்டய பயிற்​சி​யில் 200-க்​கும் மேற்​பட்ட தன்​னார்​வலர்​கள் சேர்ந்​துள்​ளனர்.

தமிழ் மொழியை 2-ம் அல்​லது 3-ம் மொழி​யாக பயிலும் அயல​கத் தமிழர்​களுக்கு பயிற்​று​விக்க தமிழ் பரப்​புரைக் கழகம் உரு​வாக்​கப்​பட்​டு, 2022-23, 2023-24-ம் ஆண்​டு​களுக்கு ரூ.2 கோடி ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டு, பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன.

கடந்த 2021-ம் ஆண்​டில் 19 நாடு​களில் 110 தொடர்பு மையங்​களு​டன் செயல்​பட்ட தமிழ் இணை​யக் கல்விக்​கழகம், தற்​போது 39 நாடு​களில் 189 மையங்​களு​டன் செயல்​பட்டு வரு​கிறது. திமுக அரசு பொறுப்​பேற்​ற​தில் இருந்து 20 நாடு​களில் 79 தொடர்பு மையங்​கள் தொடங்​கப்பட்டுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in