Published : 11 May 2025 02:42 PM
Last Updated : 11 May 2025 02:42 PM
கடலூர்: நெய்வேலி என்எல்சி இரண்டாவது அனல் மின் நிலைய டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட தீ விபத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசமடைந்ததாகக் கூறப்படுகிறது.
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் உள்ள, டிரான்ஸ்பார்மரில் இன்று (மே.11) அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசமடைந்ததாகக் கூறப்படுகிறது.
நெய்வேலி தீயணைப்புத் துறை வீரர்கள் தீயை அணைக்கும் நடவடிக்கையை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்த டிரான்ஸ்பார்மரில் இருந்து தான் பல மாநிலங்களுக்கு மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT