Published : 06 Jul 2018 10:19 AM
Last Updated : 06 Jul 2018 10:19 AM

நுகர்பொருள் வாணிபக் கழகத்துக்கு ரூ.300 கோடியில் கிடங்கு, நெல் சேமிப்பு கலன்கள்: முதல்வர் கே. பழனிசாமி அறிவிப்பு

தமிழ்நாடு நுகர்பொருள் வாணி பக் கழகத்துக்கு ரூ. 300 கோடியில் புதிய கிடங்குகள், நெல் சேமிப்பு கலன்கள், துருப்பிடிக்காத நவீன இரும்புக் கூரைகள் மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படும் என முதல்வர் கே. பழனிசாமி அறி வித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் விதி 110-ன் கீழ் முதல்வர் வெளியிட்ட அறிவிப்புகள்:

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் கீழ் இயங்கும் 1,367 விடுதிகளுக்கு தலா ரூ. 2 லட்சம் வீதம் ரூ. 27 கோடியே 34 லட்சம் மதிப்பில் இரும்பு அலமாரிகள் நடப்பு ஆண்டில் வழங்கப்படும்.

திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம், தருமபுரி, வேலூர் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள பழங்குடியினருக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் ரூ. 3 லட்சம் மதிப்பீட்டில் 50 வீடுகள் வீதம் 250 வீடுகள் கட்டப்படும். இதற்காக ரூ. 7 கோடியே 50 லட்சம் செலவிடப்படும். அவர்களின் வாழ்வாதாரம் மேம்பட ஒவ்வொரு மாவட்டத்திலும 10 நபர்களைக் கொண்ட 5 குழுக்களை அமைத்து, ஒரு குழுவுக்கு ரூ. 10 லட்சம் வீதம் 25 குழுக்களுக்கு ரூ. 2 கோடியே 50 லட்சம் வழங் கப்படும்.

மூன்றடுக்கு கிடங்கு வளாகம்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்துக்கு சென்னை புறநகர் பகுதியான மறைமலை நகரில் நவீன தொழில்நுட்பம் மற்றும் இயந்திர பயன்பாட்டுடன் கூடிய மூன்றடுக்கு கிடங்கு வளாகம் ரூ. 75 கோடியில் கட்டப்படும்.

பொள்ளாச்சி, திருவாரூர், தாழையூத்து ஆகிய இடங்களில் உள்ள நவீன அரிசி ஆலை வளாகங்களில் தலா 15,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நவீன தொழில்நுட்ப நெல் சேமிப்பு கலன்கள் ரூ. 90 கோடியில் அமைக்கப்படும்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கிடங்குகள் நவீன கருவிகளுடன் ரூ. 40 கோடியில் தானியங்கிக் கிடங்குகளாக நவீனமயமாக்கப்படும்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் 300 சொந்த கிடங்கு கட்டிடங்களில் கல்நார் கூரைத் தகடுளை அகற்றிவிட்டு, வர்ணம் பூசப்பட்ட, உறுதித் தன்மை கொண்ட துருப்பிடிக் காத இரும்புக் கூரை வசதி நடப்பாண்டில் 100 கிடங்குகளில் ரூ. 45 கோடியில் அமைக்கப் படும்.

மின்ஆக்கி நிறுவுதல்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் பெருவளாக சேமிப்புக் கிடங்குகளில் சாலை வசதி, நீர் வடிகால், சுமை தூக்குவோர் அறைகள், குடிநீர், மின்ஆக்கி நிறுவுதல் போன்ற பணிகள் ரூ. 50 கோடியில் மேற்கொள்ளப்படும்.

நடப்பு ஆண்டில் கூட்டுறவு நிறுவனங்களுக்கு கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதி உதவியுடன் 117 இடங்களில் ரூ. 26 கோடியே 9 லட்சத்தில் சொந்தக் கட்டிடங்கள் கட்டப் படும்.

94 இடங்களில்

கூட்டுறவு சங்கங்களை நவீன மயமாக்குதல் முயற்சியில் கூட்டுறவு மற்றும் வளர்ச்சி நிதி உதவியுடன் 94 இடங்களில் ரூ. 9 கோடியே 85 லட்சத்தில் பணிகள் மேற்கொள்ளப்படும். ரூ. 2 கோடியே 10 லட்சத்தில் மத்திய கூட்டுறவு வங்கியின் 14 புதிய கிளைகள் தொடங்கப்படும்.

தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்துக்கு அரியலூர், பெரம்பலூர் ஆகிய இடங்களில் தலா 1,000 மெட்ரிக் டன் கொள்ளவு கொண்ட உரக் கிடங்குகள் கூட்டுறவு வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி நிதி உதவியுடன் ரூ. 1 கோடியே 80 லட்சம் செலவில் அமைக்கப்படும்.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x