

முதல்வர் பற்றி அவதூறு செய்தி வெளியிட்ட இலங்கை அரசைக் கண்டித்து அதிமுக வழக்க றிஞர்கள் சென்னையில் ஆர்ப்பாட் டம் நடத்தினர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடி பற்றி இணையதளத்தில் அவதூறு செய்தி வெளியிட்ட இலங்கை அரசைக் கண்டித்தும், அந்தச் செய்தியை வெளியிட்டவர் மற்றும் இணையதளத்தை நிர்வகிப்ப வர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் அதிமுக வழக்கறிஞர்கள் சென்னை மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் அருகே ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு அதிமுக வழக்கறிஞர்கள் பிரிவு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான நவநீதகிருஷ் ணன் தலைமை வகித்தார். இதில் பங்கேற்ற வழக்கறிஞர்கள், இலங்கை அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் அவதூறு செய்தி தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி டிஜிபி அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
இதுதொடர்பாக நவநீத கிருஷ்ணன் கூறும்போது, ‘‘அவதூறு செய்தி வெளியிட்டவர் வெளிநாடுகளில் இருந்தாலும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும். அந்தச் சட்டத்தை பயன் படுத்தி நடவடிக்கை எடுக்கும் படி டிஜிபியிடம் மனு கொடுத்துள் ளோம்’’ என்றார்.