மெலட்டூரில் மே 11-ம் தேதி பாகவத மேளா தொடக்கம்

மெலட்டூரில் மே 11-ம் தேதி பாகவத மேளா தொடக்கம்
Updated on
1 min read

தஞ்சாவூர்: மெலட்டூரில் பாகவத மேளா நாட்டிய நாடக சங்கம் சார்பில் வரும் 11-ம் தேதி பாகவத மேளா தொடங்குகிறது. ஸ்ரீலஷ்மி நரசிம்ம ஜெயந்தியையொட்டி, தஞ்சாவூர் மாவட்டம் மெலட்டூரில் பாகவத மேளா நாட்டிய நாடக சங்கம் சார்பில் ஆண்டுதோறும் பாகவத மேளா நாட்டிய நாடகம் (தெலுங்கு மொழியில்) நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டு விழா மெலட்டூர் வரதராஜப் பெருமாள் கோயில் சந்நிதியில் மே 11 -ம் தேதி இரவு தொடங்குகிறது.

தொடக்க விழாவில் பரத நாட்டியக் கலைஞர் பத்மா சுப்ரமணியம், மத்திய அரசின் கலாச்சார அமைச்சக இயக்குநர் அணீஷ் பி.ராஜன் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். இரவு 9.30 மணிக்கு பிரகலாத சரித்திரம்- பாகவத மேளா நாடகம் நடைபெறும்.

வரும் 12 -ம் தேதி இரவு 8 மணிக்கு பரதநாட்டியம், 9 மணிக்கு தமிழில் பரிஷ்வாங்க பட்டாபிஷேகம், 13-ம் தேதி இரவு 9 மணிக்கு பாகவத மேளா நாடகம் - ஹரிச்சந்திரா நாட்டிய நாடகம் முதல் பாகம், 14 -ம் தேதி இரவு 9 மணிக்கு ஹரிச்சந்திரா நாட்டிய நாடகம் 2-ம் பாகம், 15 -ம் தேதி இரவு 8 மணிக்கு பரதநாட்டியம், 16 -ம் தேதி இரவு 9 மணிக்கு உஷா பரிணயம், 17-ம் தேதி இரவு 9 மணிக்கு மார்க்கண்டேய சரித்திரம், 18 -ம் தேதி இரவு 9 மணிக்கு வள்ளித் திருமணம் தமிழ் நாடகம், 19-ம் தேதி மாலை ஆஞ்சநேய ஆராதனை ஆகியவை நடைபெற உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை சங்க நிர்வாக அறங்காவலர் எஸ்.குமார் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in