சட்டப்பேரவை ஒத்திவைப்பு

சட்டப்பேரவை ஒத்திவைப்பு
Updated on
1 min read

கடந்த 22 நாட்களாக நடைபெற்று வந்த சட்டப் பேரவை நிகழ்ச்சிகள், தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக் கப்பட்டது.

தமிழக அரசின் 2014-15ம் ஆண்டுக்கான பட்ஜெட் சட்டப் பேரவையில் கடந்த பிப்ரவரி 13ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதன் பிறகு, பட்ஜெட் மீதான பொது விவாதம் சில நாட்கள் நடைபெற்றது. நாடாளுமன்ற தேர்தல் காரணமாக அது பின்னர் ஒத்திவைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, ஜூலை 10-ல் பேரவை கூடியது. ஆகஸ்ட் 12-ம் தேதி வரை பல்வேறு துறைகளின் மானியக்கோரிக்கை தாக்கலும், அவற்றின் மீதான விவாதமும் நடந்துவந்தது. இந்நிலையில், பேரவையை தேதி குறிப்பி டாமல் ஒத்திவைக்கும் தீர்மானத்தை அவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வம் செவ்வாய்க் கிழமை கொண்டுவந்தார். குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர், தேதி குறிப்பிடப்ப டாமல் அவை ஒத்திவைக்கப் படுவதாக பேரவைத் தலைவர் ப.தனபால் அறிவித்தார்.

அதிக வினாக்களுக்கு விடையளித்த அமைச்சர்

சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தின்போது நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிக வினாக்களுக்கு (27) பதில் அளித்தார்.

பேரவையில் செவ்வாய்க் கிழமை பேசிய பேரவைத் தலைவர் ப.தனபால் இத்தக வலைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “நெடுஞ் சாலைத் துறை அமைச்சருக்கு அடுத்தபடியாக மின்துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன் 26 கேள்விகளுக்கும், சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி 25 கேள்விகளுக்கும், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா 24 கேள்விகளுக்கும், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் 19 கேள்விகளுக்கும் பதில் அளித்தனர்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in