இப்ப விழுமோ... எப்போ விழுமோ... - சென்னையில் பாழடைந்த நிலையில் பயமுறுத்தும் ரயில்வே எஸ்பி அலுவலக கட்டிடம்

இப்ப விழுமோ... எப்போ விழுமோ... - சென்னையில் பாழடைந்த நிலையில் பயமுறுத்தும் ரயில்வே எஸ்பி அலுவலக கட்டிடம்
Updated on
1 min read

சென்னை: சென்னை எழும்​பூர் அருகே தாசப்​பிர​காஷ் பகு​தி​யில் உள்ள தமிழக ரயில்வே காவல் கண்​காணிப்​பாளர் அலு​வல​க கட்​டிடம் ஆங்​காங்கே சேதமடைந்து காணப்​படு​கிறது. ஒரு சில இடங்​களில் இடிந்து விழும் நிலை​யும் உள்​ளது. இதனால், இங்கு பணி​யாற்​றும் ஊழியர்​கள் சற்று கலக்​கம் அடைந்​துள்​ளனர். உடனடி​யாக, இக்​கட்​டிடத்தை சீரமைக்க வலி​யுறுத்தி உள்​ளனர்.

சென்னை எழும்​பூர் அருகே தாசப்​பிர​காஷ் பகு​தி​யில் தமிழக ரயில்வே காவல் துறை​யின், சென்னை மாவட்​டத்​துக்​கான ரயில்வே காவல் கண்​காணிப்​பாளர் அலு​வல​க கட்​டிடம் அமைந்​துள்​ளது. சென்னை எழும்​பூரில் இருந்து சேத்​துப்​பட்டு செல்​லும் ரயில் வழித்​தடத்​தில் தண்​ட​வாளம் அருகே வலதுபுறத்​தில் இந்த அலு​வல​க கட்​டிடம் இருக்​கிறது.

இந்த கட்​டிடத்​தின் தரைத்​தளத்​தில் ரயில்வே காவல்​துறைக்​கான அமைச்​சுப் பணி​யாளர்​கள் அலு​வல​கம், முதல் தளத்​தில் காவல் கண்​காணிப்​பாளர் அறை, காவல் கட்​டுப்​பாட்டு பிரிவு, எஸ்​.பி. சிறப்பு குற்​றப்​பிரிவு உட்பட பல்​வேறு பிரிவு அலு​வல​கங்​கள் இயங்​கு​கின்​றன. தரைதளம், முதல்​தளத்​தில் சுமார் 50-க்​கும் மேற்​பட்​டோர் பணி​யாற்றி வரு​கின்​றனர்.

இந்த கட்​டிடத்​தின் முதல் தளத்​தில் பணி​யாற்​றும் காவலர்​கள், காவல் கண்​காணிப்​பாளரை பார்க்க வரும் பொது​மக்​கள், மற்ற துறையைச் சேர்ந்​தவர்​கள் ஒரு​வித அச்​சத்​துடன் வந்து செல்​லும் நிலை உள்​ளது. இதற்கு முக்​கிய காரணம் கட்​டிடத்​தின் முன்​பக்​கத்​தில் சிலாப்​பு​கள் திடீர் திடீரென பெயர்ந்து விழு​வது​தான்.

கீழ் தளத்​தில் காவல் பணி​யில் இருக்​கும் காவலர் மீதும் கட்​டிடத்​தின் கட்​டு​மான சிலாப்​பு​கள் பெயர்ந்து விழும் அவல நிலை உள்​ளது. மேலும், கட்​டிடத்​தின் பல்​வேறு இடங்​களில் விரிசல்​கள் காணப்​படு​கின்​றன. கட்​டு​மான சிலாப்​பு​கள் எப்​போது நம் மீது பெயர்ந்து விழும் என்று அச்​சத்​துடன் பணி​யாற்றி வரு​கின்​றனர்.

இது குறித்​து, பணி​யாளர்​கள் சிலர் கூறும்​போது, “இந்த கட்​டிடம் ரயில்​வேக்கு சொந்​த​மானது. மேலும், இது ஒரு பழமை​யான கட்​டிட​மாகும். முகப்பு பகு​தி​யில் சிலாப்​பு​கள் இடிந்து கீழே விழும் நிலை இருக்​கிறது. இதை சீரமைத்து வரு​கின்​றனர். இந்த கட்​டிடத்​துக்கு பதிலாக, மாற்​று கட்​டிடம் ரயில்​வே​யிடம் கேட்​கப்​பட்​டுள்​ளது. அவர்​களிடம் இருந்து இது​வரை பதில் இல்​லை. தற்​போது, கட்​டிடத்​தின் சேதமடைந்த பகு​தி​களை சீரமைத்து தரு​வ​தாக தெரி​வித்து உள்​ளனர். விரை​வில் வேறு இடத்​தில் கட்​டிடம் தயார் செய்து தரு​வார்​கள்​ என்​று எதிர்​பார்க்​கிறோம்​” என்​றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in