திண்ணை பிரச்சாரத்தை தீவிரப்படுத்துவோம்: ஜெயலலிதா பேரவை கூட்டத்தில் தீர்மானம்

சென்னையில் நடந்த ஜெயலலிதா பேரவை ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறார் ஆர்.பி.உதயகுமார்.
சென்னையில் நடந்த ஜெயலலிதா பேரவை ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறார் ஆர்.பி.உதயகுமார்.
Updated on
1 min read

சென்னை: சட்டப்பேரவை தேர்தல் வெற்றிக்காக திண்ணை பிரச்சாரத்தை தீவிரப்படுத்த வேண்டும் என்று ஜெயலலிதா பேரவை மாவட்ட செய​லா​ளர்​கள் ஆலோ​சனை கூட்​டத்​தில் நேற்று தீர்மானம் நிறைவேற்​றப்​பட்​டது. ஜெயலலிதா பேரவை மாவட்ட செய​லா​ளர்​கள் ஆலோ​சனைக் கூட்​டம், பேரவை மாநில செய​லா​ளர் ஆர்​.பி.உதயகு​மார் தலை​மை​யில் சென்னை ராயப்​பேட்​டை​யில் உள்ள அதிமுக தலைமை அலு​வல​கத்​தில் நேற்று நடை​பெற்​றது.

இக்​கூட்​டத்​தில் நிறைவேற்​றப்​பட்ட தீர்​மானங்​கள் விவரம்:ஜெயலலிதா பேரவை சார்​பில், பழனி​சாமி​யின் பிறந்​த​நாளான மே 12-ம் தேதி, ஆலயங்​கள்தோறும் சர்வ சமய பிரார்த்​தனை​கள் நடத்​தப்​படும். ஏழைகளுக்கு நலத்​திட்ட உதவி​கள் வழங்​கப்​படும்.

அடுத்த ஆண்​டு, மே 12-ம் தேதி பழனி​சாமி​யின் பிறந்​த​நாளை மக்​கள் கொண்​டாடிக்​கொண்டு இருக்​கும்​போது, அவர் அனை​வரின் ஆதர​வுடன் முதல்​வ​ராக பொறு​பேற்​றுக்​கொண்டு பணி​யாற்​று​வார். அத்​தகைய வெற்றி தீர்ப்பை 2026 தேர்​தலில் பெற்​றுத்​தரும் வரை ஊண், உறக்​கம் இன்​றி, இரவு, பகல் பாராது ஜெயலலிதா பேர​வை​யினர் உழைப்​போம். அதற்​காக மாபெரும் திண்ணை பிரச்​சா​ரத்தை தொடர்ந்து எடுத்​துச்​ செல்வோம். இவ்​வாறு கூட்​டத்​தில் தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in