பணியின்போது மரணமடையும் கிராம உதவியாளர்களின் வாரிசுகளுக்கு வேலை: அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் உறுதி

பணியின்போது மரணமடையும் கிராம உதவியாளர்களின் வாரிசுகளுக்கு வேலை: அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் உறுதி
Updated on
1 min read

சென்னை: கிராம உதவியாளர்கள் பணியின்போது மரணம் அடைந்தால், அவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் வருவாய் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது மாரிமுத்து எம்எல்ஏ, "வருவாய் துறையில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம உதவியாளர்கள் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியத்தின்கீழ் கொண்டு வரப்படுவார்களா?" என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு அமைச்சர் சாத்தூர் ராமசந்திரன் அளித்த பதில்: பணி நியமனம் செய்யும்போதே சிறப்பு காலமுறை ஊதியத்தில்தான் பணி நியமனம் செய்துள்ளனர். வருவாய்த் துறையில் மட்டும் அல்ல, மற்ற துறைகளிலும் இதே நிலைதான். முதல்வரிடம் பேசி காலமுறை ஊதியமாக மாற்றுவது குறித்து முடிவு எடுக்கப்படும்.

இதுவரை கிராம உதவியாளர்கள் மரணம் அடைந்தால் அவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கப்படுது இல்லை. 10 நாட்களுக்கு முன்பாக கிராம உதவியாளர்கள் மரணம் அடைந்தால் அவர்கள் வாரிசுகளுக்கு வேலை வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in