மாநில சுயாட்சிக்கான தமிழ்நாட்டின் போராட்டம் தனக்கானது மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின் | கோப்புப்படம்
முதல்வர் ஸ்டாலின் | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: “கூட்டாட்சியியலின் சமநிலையை உறுதிசெய்வது ஒரு கோரிக்கை மட்டுமல்ல, அது அரசியலமைப்புச் சட்டம் விதிக்கும் கடமை. தமிழ்நாட்டின் போராட்டம் தனக்கானது மட்டுமல்ல, அனைத்து மாநிலங்களுக்கும் உரிய அதிகாரங்களுக்கானது” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கூட்டாட்சியியலின் சமநிலையை உறுதிசெய்வது ஒரு கோரிக்கை மட்டுமல்ல, அது அரசியலமைப்புச் சட்டம் விதிக்கும் கடமை. தமிழ்நாட்டின் போராட்டம் தனக்கானது மட்டுமல்ல, அனைத்து மாநிலங்களுக்கும் உரிய அதிகாரங்களுக்கானது.

மாநில சுயாட்சியை மீட்டெடுப்பது ஏன் இப்போதைய முக்கியத் தேவையாக உள்ளது என்பதை விளக்கி நான் எழுதியுள்ள கட்டுரை 'தி இந்து' ஆங்கில நாளேட்டில் இன்று வெளியாகியிருக்கிறது. வாசிக்க...” என்று முதல்வர் கூறியுள்ளார்.

Ensuring a fair federal balance is not just a demand. It is a constitutional imperative. Tamil Nadu’s fight is not just for itself, but for the rightful powers of all States.

Read my article in today's @The_Hindu on why reclaiming #StateAutonomy is the need of the hour.… pic.twitter.com/aBE8YPoxBz

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in