ராஜி​னாமா அறி​விப்பை திரும்ப பெற்​றார் துரை வைகோ: மதி​முக​வில் உட்​கட்சி மோதல் முடிவுக்கு வந்​தது

சென்னையில் மதிமுக தலைமையகத்தில் நடைபெற்ற நிர்வாகக்குழு கூட்டத்துக்கு பிறகு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ முன்பாக இணைந்து பணியாற்றுவதாக உறுதியளித்த துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, முதன்மை செயலாளர் துரை வைகோ.
சென்னையில் மதிமுக தலைமையகத்தில் நடைபெற்ற நிர்வாகக்குழு கூட்டத்துக்கு பிறகு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ முன்பாக இணைந்து பணியாற்றுவதாக உறுதியளித்த துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, முதன்மை செயலாளர் துரை வைகோ.
Updated on
2 min read

சென்னை: மதி​முக துணை பொதுச்​செய​லா​ளர் மல்லை சத்யா வருத்​தம் தெரி​வித்​ததையடுத்​து, உட்​கட்சி மோதல் முடிவுக்கு வந்​தது. தனது ராஜி​னாமா அறி​விப்​பை​யும் திரும்​பப் பெறு​வ​தாக முதன்​மைச் செய​லா​ளர் துரை வைகோ அறி​வித்​துள்​ளார். மதி​முக துணை பொதுச்​செய​லா​ளர் மல்லை சத்​யா, முதன்​மைச் செய​லா​ளர் துரை வைகோ இடையே​யான பனிப்​போர் அண்​மை​யில் நடை​பெற்ற மதி​முக தொழிலா​ளரணி கூட்​டத்​தில் வெளிப்​பட்​டது. இரு தரப்​பினரை​யும் சமா​தானப்​படுத்​தும் வகை​யில் நிர்​வாகக் குழு கூட்​டம் நடை​பெற்​றது.

இதில் பங்​கேற்​கும் முன் முதன்​மைச் செய​லா​ளர் துரை வைகோ செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, “உட்​கட்சி விவ​காரத்தை வீடியோ எடுத்து வெளி​யிட்​டு, கட்​சிக்​குள் குழப்​பத்தை ஏற்​படுத்​தி​யது அவர் தான். கட்​சிக்கு அவதூறாக சமூக வலை​தளத்​தில் பதி​விடக் கூடாது” என்​றார். இதேபோல், துணை பொதுச்​செய​லா​ளர் மல்லை சத்யா வெளி​யிட்ட சமூக வலைதள பதி​வில், “நான் வைகோ​வின் சேனா​திபதி என்​ப​தற்கு அவர் முகம் பதித்த மோ​திரம் அணிந்​திருப்​பதே அடை​யாளம்” என கூறியிருந்​தார்.

இதற்​கிடையே, நேற்று திட்​ட​மிட்​டபடி கூட்​டம் தொடங்​கியது. பிறகு செய்​தி​யாளர்​களிடம் வைகோ கூறிய​தாவது: மதி​முக துணை பொதுச்​செய​லா​ளர் மல்லை சத்​யா​வுக்​கும், முதன்​மைச் செய​லா​ளர் துரை வைகோவுக்கு இடையே கருத்து வேறு​பாடு​கள் எழுந்த சூழலில், இரு​வருமே மனம்​விட்டு பேசினர். கட்​சிக்​கும் பொதுச்​செய​லா​ளருக்கும், முதன்​மைச் செய​லா​ள​ருக்கும் பக்​கபல​மாக செயல்​படு​வேன் என மல்லை சத்யா சொன்​னார்.

இதை ஏற்​றுக் வில​கல் முடிவை திரும்​பப் பெறு​வ​தாக​வும் துரை வைகோ அறி​வித்​தார். இரு​வரும் கட்​டித் தழுவி கரம் குலுக்​கி, இணைந்து பணி​யாற்​று​வோம் என நிர்வாக குழுவுக்கு சமிக்​கை​யாக தெரி​வித்​தனர். வக்பு திருத்​தச் சட்​டத்​துக்கு எதி​ராக ஏப்​.26-ல் நடை​பெறும் ஆர்ப்​பாட்​டத்தை சென்​னை​யில் நான், மல்லை சத்யா உள்​ளிட்​டோரும், மதுரை​யில் துரை வைகோ, பூமி​நாதன் எம்​எல்ஏ, கோவை​யில் அவைத் தலை​வர் அர்​ஜுன​ராஜ், பொருளாளர் செந்​தில​திபன் ஆகியோர் தலை​மையேற்று நடத்த இருக்​கிறோம். மதி​முக பொதுக்​குழு ஜூன் மாதம் நடை​பெறும். இவ்​வாறு தெரி​வித்​தார்.

துரை வைகோ கூறும்​போது, “கட்​சி​யில் கருத்து வேறு​பாடு தவிர்க்க முடி​யாதது. மல்லை சத்யா வருத்​தம் தெரி​வித்​து​விட்​டார். அவரளித்த வாக்​குறுதி அடிப்​படை​யில் மீண்​டும் பொறுப்​பில் தொடர்​வேன். அவரது அரசி​யல் வாழ்​வுக்கு நானும் உறு​துணை​யாக இருப்​பேன்” என்​றார். இதே​போல் மல்லை சத்யா கூறும்​போது, “என்​னுடைய நடவடிக்​கைகள் துரை வைகோவை காயப்​படுத்​தி​யிருந்​தால் வருத்​தம் தெரிவிக்​கிறேன்.

அவர் தொடர்ந்து கட்​சியை முன்​னெடுத்​துச் செல்ல வேண்​டும் என்று சொன்​னேன்” என்​றார். முன்​ன​தாக, மதி​முக​வின் 32-வது ஆண்டு தொடக்க விழாவை மே 6-ம் தேதியி​லிருந்து 2 வாரம் தொண்​டர்​கள் வீடு​களில் கொடியேற்​றி, நலத்​திட்ட உதவி​கள் வழங்கி கொண்​டாட வேண்​டும் என்​பன உள்​ளிட்​ட 9 தீர்​மானங்​கள்​ கூட்டத்தில் நிறைவேற்​றப்​பட்​டன.

இணைந்த கரங்​கள்: இதனிடையே மதி​முக துணைப் பொதுச்​செய​லா​ளர் மல்லை சி.ஏ.சத்யா வெளி​யிட்ட அறிக்​கை: சமூக ஊடகங்​களில் வந்த பதிவு​களால் கழகத்​தில் கசப்​புணர்வு ஏற்​படு​கின்ற நிலை​யும், அதனால் மதி​முக​வின் கட்​டுப்​பாட்​டுக்கு ஊறு நேரு​கின்ற நிலை​யும் ஏற்​பட்​டதற்கு இன்று (நேற்​று) கட்​சி​யின் நிர்​வாகக் குழு​வில் எனது மனப்​பூர்​வ​மான வருத்​தத்​தை, என் உயிர் தலை​வர் வைகோ​விட​மும், நிர்​வாகக் குழு உறுப்​பினர்​களிட​மும் தெரி​வித்​துக் கொண்​டேன்.

இது போன்ற சூழல் இனி எதிர்​காலத்​தில் நிகழாது. கட்​சி​யின் எதிர்​காலம் முதன்மை செய​லா​ளர் துரை வைகோவுக்கு உறு​துணை​யாக இருப்​பேன். இதனை மனப்​பூர்​வ​மாக ஏற்று கொண்டு துரை வைகோ, முதன்​மைச் செய​லா​ளர் பொறுப்​பில் தொடர்ந்து செயல்​படு​வேன் என்று நிர்​வாகக் குழு​வில் அறி​வித்​தது எனக்​கும், கட்​சி​யினருக்​கும் பெரு​மகிழ்ச்​சியை ஏற்​படுத்தி இருக்​கிறது.

நானும் துரை வைகோ​வும் இணைந்த கரங்​களாக வைகோவுக்​கும், கட்​சி​யினருக்​கும் துணை​யாக செயல்​படு​வோம். கட்​சியை கட்​டிக் காப்​போம். தமிழக அரசி​யல் களத்​தில் மதி​முக வலுவுடன் தழைத்​தோங்க பணி​யாற்​று​வோம். இவ்​வாறு தெரி​வித்​துள்​ளார்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in