கொடும்பாளூர் அகழாய்வில் தங்க குண்டுமணி கண்டெடுப்பு

புதுக்கோட்டை மாவட்டம் கொடும் பாளூர் அகழாய்வில் நேற்று கண்டெடுக்கப்பட்ட மண் பானைகள். (அடுத்த படம்) கண்டெடுக்கப்பட்ட தங்க குண்டுமணி.
புதுக்கோட்டை மாவட்டம் கொடும் பாளூர் அகழாய்வில் நேற்று கண்டெடுக்கப்பட்ட மண் பானைகள். (அடுத்த படம்) கண்டெடுக்கப்பட்ட தங்க குண்டுமணி.
Updated on
1 min read

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே கொடும்பாளூரில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில் தங்க குண்டுமணி நேற்று கண்டெடுக்கப்பட்டது.

விராலிமலை அருகே கொடும்பாளூரில் குடியிருப்புகள் அமைந்துள்ள அக்ரஹாரம் மேட்டுப் பகுதியில் மத்திய தொல்லியல் துறையின் திருச்சி வட்டப் பிரிவு சார்பில் அகழாய்வு பணி ஜனவரியில் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இங்கு மொத்தம் 6 இடங்களில் அகழாய்வு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், 6-வது குழியில் தங்கத்தில் செய்யப்பட்ட குண்டுமணி நேற்று கண்டெடுக்கப்பட்டது. மேலும், அருகருகே அடுக்கி வைக்கப்பட்ட நிலையில், மண் பானைகளும் கண்டெடுக்கப்பட்டன. குண்டுமணி மற்றும் மண் பானைகள் குறித்து ஆய்வுக்குப் பிறகு முழு விவரம் தெரியவரும் என அகழாய்வாளர்கள் தெரிவித்தனர். இங்கு ஏற்கெனவே சுமார் 4 அடி ஆழத்தில் செங்கல் சுவர் கட்டுமானம் தென்பட்டது. தொடர்ந்து, தக்களி, கொண்டை வடிவில் ஊசி, வட்டக்கல், கூர் வடிவிலான எலும்புகள் கிடைத்து குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in