தவெக ஐ.டி. பிரிவு நாளை ஆலோசனை

தவெக ஐ.டி. பிரிவு நாளை ஆலோசனை
Updated on
1 min read

சென்னை: தவெகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் சமூக ஊடக பிரிவு ஆலோசனை கூட்டம் சோழிங்கநல்லூரில் நாளை நடக்கிறது.

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் சமூக ஊடக பிரிவு ஆலோசனை கூட்டம் சென்னை சோழிங்கநல்லூர், ஓஎம்ஆர் சாலையில் உள்ள கைலாஷ் கார்டனில் ஏப்.19-ம் தேதி (நாளை) நடைபெறுகிறது.

பொதுச் செயலாளர் என்.ஆனந்த் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு துணைப் பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஆர்.ஜெயபிரகாஷ், சமூக ஊடக பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஆர்.குருமூர்த்தி, சமூக ஊடக பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர் ஏ.ஃப்ளோரியா இமாக்குலேட் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in