டிடிவி தினகரனுக்கு மருத்துவ பரிசோதனை

டிடிவி தினகரனுக்கு மருத்துவ பரிசோதனை
Updated on
1 min read

சென்னை: அப்போலோ மருத்துவமனையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளார். 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் கட்சியை பலப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, டிடிவி தினகரன் சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு டிடிவி தினகரன், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

மருத்துவமனையின் மருத்துவ சேவைகள் இயக்குநர் ஆர்.கே.வெங்கடாசலம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘டிடிவி தினகரன் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 11-ம் தேதி (நேற்று) அவர் வீடு திரும்புவார்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in