

சென்னை: பனையூரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்நோக்கி விஜய்யின் தவெக தீவிர களப்பணியாற்றி வருகிறது. இந்நிலையில், பூத் கமிட்டி நியமிப்பது குறித்து விரைவில் கூட்டம் நடைபெறும் என கட்சித் தலைவர் விஜய் அறிவித்திருந்தார். இது தொடர்பாக ஆலோசிப்பதற்காக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், பனையூரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்துக்கு கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தலைமை வகித்தார். இதில் பூத் கமிட்டி நியமிப்பது தொடர்பாக மாவட்டச் செயலாளர்களிடம் கருத்துகளை கேட்டறிந்தார். அப்போது, பின்பற்ற வேண்டிய சில அறிவுறுத்தல்களை பொதுச்செயலாளர் நிர்வாகிகளுக்கு வழங்கியதாகத் தெரிகிறது. இதையடுத்து பூத் கமிட்டி அமைத்து, வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த இருப்பதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.