

கோவையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்த ஆய்வு முறையை நடிகை கஸ்தூரி கிண்டல் செய்திருக்கிறார்.
நீர்வரத்து அதிகரிப்பால் கோவையில் பல்வேறு குளங்கள் நிரம்பத் தொடங்கியிருக்கிறது. இதனை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பார்வையிட்டார். அப்போது இருசக்கர வாகனத்தில் பின்னால் உட்கார்ந்துக் கொண்டு பயணப்பட்டார்.
சாலை ஓர உணவங்களில் தேநீர் அருந்தியது, சாப்பிட்டது என்று பல புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது. அப்போது, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சென்ற இருசக்கர வாகனத்தை ஓட்டியவர், பின்னால் வந்தவர்கள் என யாருமே ஹெல்மெட் அணியாதது குறிப்பிடத்தக்கது.
இதனைக் குறிப்பிட்டு நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் “அவர் ஏன் ஹெல்மெட் அணியவில்லை என்றால், அவரது முகம் பத்திரிகையாளர்களுக்கும் மக்களுக்கும் தெரியாமல் போயிருக்கும் என நான் நினைக்கிறேன். அனைவருமே அவர் முகத்தைப் பார்க்க வேண்டும் என விரும்புயிருக்கிறார்” என்று தெரிவித்திருக்கிறார்.