

கடலூர்: கடலூர் அருகே அரசு விரைவுப் பேருந்தும் தனியார் பேருந்தும் மோதி விபத்து ஏற்பட்டது. இதில்
18 பேர் படுகாயம் அடைந்தனர் . இதுகுறித்து புதுசத்திரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூரில் இருந்து இன்று (ஏப்.10) காலை சுமார் 6 மணி அளவில் தனியார் பேருந்து ஒன்று 20 பயணிகளுடன் குள்ளஞ்சாவடி சென்று கொண்டிருந்தது .ஆலப்பாக்கம் மேம்பாலத்தில் தனியார் பேருந்து செல்லும்போது அதே வழியில் சென்னையில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் அரசு விரைவுப் பேருந்தின் பின்புறம் மோதியது. இதில் சாலை ஓரத்தில் உள்ள வயலில் அரசுப் பேருந்து இறங்கி நின்றது.
இதில் இரு பேருந்துகளில் இருந்த சாக்கான் குடி உதயகுமார்( 35),பூண்டியாங்குப்பம் அமிர்தவள்ளி (60), பூண்டியாங்குப்பம் தமிசரசி (65),பூண்டியாங்குப்பம் அலமேலு (65),திருத்துறைப்பூண்டி பிரகாஷ் (28), திருத்துறைப்பூண்டி நவீன் ராஜ் (34), கடலூர் வாசுகி( 49), பூண்டியாங்குப்பம் வீரகுமார் (32), திருக்குவளை லெனின் (49), மேல்மலையனூர் பச்சையப்பன்( 52) உள்ளிட்ட 18 பேர் படுகாயம் அடைந்தனர்.
படுமாயமடைந்த அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு மருத்துவமனையில் 16 பேரும் சிதம்பரத்தில் உள்ள கடலூர் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரண்டு பேரும் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து புது சத்திரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.