மாற்றுத் திறனாளிகளை இழிவாக பேசியதாக அமைச்சர் துரைமுருகனை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மாற்றுத் திறனாளிகளை இழிவாக பேசியதாக அமைச்சர் துரைமுருகனை கண்டித்து ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

மதுரை: மாற்றுத் திறனாளிகளை இழிவாக பேசிய அமைச்சரை கண்டித்து தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் முன்னேற்ற உரிமை மீட்பு சங்கம் சார்பில் மதுரை ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்டத் தலைவர் கோபி தலைமை வகித்தார். மாநிலப் பொருளாளர் ஜெயராமன் முன்னிலை வகித்தார். இதில் மாநிலத் தலைவர் நாகபாஸ்கர் பங்கேற்று பேசினார். இதில், மாநில சட்ட ஆலோசகர் முத்துக்குமார், மாவட்டச் செயலாளர் சந்திரா, நிர்வாகிகள் முருகவேல், ஆறுமுகம் ஆகியோர் பங்கேற்றனர்.

இது குறித்து மாநிலத் தலைவர் நாகபாஸ்கர் பேசும்போது, “தமிழக அரசு மாற்றுத் திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் நியமன உறுப்பினர் பதவியை அளிக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அரசாணையும் வெளியிடவுள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதி, ஊனமுற்றோர் என்ற உச்சரிப்பின் மூலம் அவர்களது மனதை ஊனப்படுத்தக் கூடாது என்பதற்காக மாற்றுத் திறனாளிகள் என்று பெயர் சூட்டினார்.

அதனை கெடுக்கும் நோக்கோடு அமைச்சர் துரைமுருகன் செயல்படுகிறார். 2016-ல் மாற்றுத் திறனாளிகளை பாதுகாக்கும் வகையிலான சட்டத்தில் மாற்றுத் திறனாளிகளின் ஊனத்தை குறிப்பிட்டு பேசினால் தீண்டாமை சட்டம் போன்று தண்டனை கிடைக்க வழிவகை உள்ளது. எனவே, தமிழக அரசு, அமைச்சர் மாற்றுத் திறனாளிகள் சமூகத்தினரிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்காவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெறும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in