Published : 09 Apr 2025 01:43 PM
Last Updated : 09 Apr 2025 01:43 PM

‘தமிழுக்கு அரும்பணியாற்றியவர்’ - குமரி அனந்தனுக்கு டிடிவி தினகரன் புகழஞ்சலி

சென்னை: தமிழுக்கும், தமிழக மக்களின் வளர்ச்சிக்கும் அரும்பணி ஆற்றியவர் குமரி அனந்தன் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குமரி அனந்தனுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவரின் மறைவுக்கு டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், "தமிழக பாஜக மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான குமரி அனந்தன் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது.

தமிழ் ஆர்வலராக, தலைசிறந்த இலக்கியவாதியாக, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராக, தமிழுக்கும், தமிழக மக்களின் வளர்ச்சிக்கும் அரும்பணி ஆற்றிய குமரி அனந்தனை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x