

சென்னை: கனிம வளங்கள் கொண்ட நிலங்களுக்கு வரி விதிக்கும் புதிய சட்டம் கடந்த 4-ம் தேதி அமலுக்கு வந்துள்ளது.
இதுகுறித்து துறை ஆணையர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசால் ‘கனிம வளம் கொண்ட நிலங்கள் மீதான வரி சட்டம் - 2024’ என்ற புதிய சட்டம் அரசிதழில் கடந்த பிப்ரவரி 20-ம் தேதி வெளியிடப்பட்டது. ‘கனிம வளங்கள் கொண்ட நிலங்கள் மீதான வரி விதிகள் - 2025’ என்ற புதிய விதியும் இயற்றப்பட்டு, கடந்த ஏப்ரல் 4-ம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, 32 கனிமங்களுக்கு வரி விகிதம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இதைதொடர்ந்து வரி, நிதிமட்டுமின்றி, கனிம வளங்கள் கொண்ட நிலங்களுக்கான வரியையும் ஏப். 4 முதல் கூடுதலாக செலுத்த வேண்டும். இதில், அதிகபட்சமாக சிலிமனைட்டுக்கு ஒரு டன் ரூ.7 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், அரசுக்கு கூடுதலாக ஆண்டுக்கு சுமார் ரூ.2,400 கோடி வருவாய் கிடைக்கும்.