ராமேஸ்வரம் வந்தடைந்தார் பிரதமர் மோடி!

ராமேஸ்வரம் வந்தடைந்தார் பிரதமர் மோடி!
Updated on
1 min read

ராமேஸ்வரம்: பாம்பனில் கடலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ரயில் பாலத்தை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி ராமேஸ்வரம் வந்துள்ளார். இலங்கையில் இருந்து இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் மண்டபம் பகுதிக்கு அவர் வந்தார்.

தமிழகத்துக்கு வந்த அவரை ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர்கள் தமிழிசை சவுந்தரராஜன், ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

தொடர்ந்து பாதுகாப்பு வாகனங்கள் புடைசூழ மண்டபத்தில் இருந்து பாம்பன் புறப்பட்டார் பிரதமர் மோடி. வழிநெடுகிலும் பாஜக தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து கடலில் அமைக்கப்பட்டுள்ள புதிய பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இந்த நிகழ்வில் தமிழ் மண்ணின் பாரம்பரிய உடையான வேட்டி மற்றும் சட்டையை அணிந்து பங்கேற்கிறார்.

திறப்பு விழா நிகழ்வுக்கு பிறகு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய உள்ளார் பிரதமர் மோடி. முன்னதாக, அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு நிகழ்வுக்காக பிரதமர் மோடி ராமேஸ்வரம் வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in