ஓய்வூதியர் புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டம்: விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு

ஓய்வூதியர் புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டம்: விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
Updated on
1 min read

ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதி யர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கு விண்ணப் பங்களை சமர்ப்பிக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கருவூலக் கணக்கு இயக்குநர் ச.முனிய நாதன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழக அரசு 2014-ம் ஆண்டு ஜுலை மாதம் 1-ம் தேதி முதல் ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 2014-ஐ நடைமுறைப்படுத் தியுள்ளது. இதற்காக அனைத்து ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதி யர்கள் புதிய மருத்துவக் காப்பீட் டுத் திட்டத்திற்கான விண்ணப் பத்தை பூர்த்தி செய்து சம்பந்தப் பட்ட ஓய்வூதியம் வழங்கும் அலு வலகம், மாவட்ட கருவூலம், சார் கருவூலம், பொதுத்துறை வங்கிகளில் ஜூலை 31-ம் தேதிக் குள் சமர்ப்பிக்க வேண்டும் என ஏற்கனவே கூறப்பட்டது. இன்னும் பல ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவில்லை என தெரிய வருகிறது.

ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதி யர்கள் அனைவ ருக்கும் இத்திட்டம் கட்டாயமாக் கப்பட்டுள்ளதால் அனைவரும் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 2014-க்கான படிவங்களை பூர்த்தி செய்து வரும் 20-ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இரண்டு படிவங்களில் பூர்த்தி செய்து ஒரு படிவத்தில் ஓய்வூ தியம் வழங்கும் அலுவலர், மாவட்டக் கருவூல அலுவலர், சார் கருவூல அலுவலர், பொதுத்துறை வங்கி மேலாளரிடமிருந்து ஒப்புகை பெற்று அதனையே மருத்துவ சிகிச்சை பெற பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in