பரந்தூர், ஆவடி மெட்ரோ ரயில் திட்டம்: ஆசிய முதலீட்டு வங்கி அதிகாரிகள் ஆய்வு

பரந்தூர், ஆவடி மெட்ரோ ரயில் திட்டம்: ஆசிய முதலீட்டு வங்கி அதிகாரிகள் ஆய்வு
Updated on
1 min read

சென்னை: பரந்தூர், ஆவடி உள்ளிட்ட மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிதியுதவி அளிப்பது குறித்து, ஆசிய முதலீட்டு வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி, சென்னையில் ஏற்கெனவே மெட்ரோ ரயில் 2-ம் கட்டம் திட்டத்துக்கு நிதி உதவி செய்துள்ளது.

தற்போது ஆய்வு பணிக்காக அதிகாரிகள் சென்னை வந்துள்ளனர். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் குழுவுடன் இணைந்து, தாம்பரம் மற்றும் கிளாம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு ஒருங்கிணைப்பு மற்றும் தொழில்நுட்ப அம்சங்களை உள்ளடக்கிய முதற்கட்ட ஆய்வுகளை நேற்று மேற்கொண்டனர்.

மேலும், பூந்தமல்லி முதல் பரந்தூர் வரையிலும், கோயம்பேடு முதல் ஆவடி வரையிலும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் குழுவுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர்.

இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன், ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் திட்டக் குழு தலைவர் வென்யு கு, நிதியியல் மேலாண்மை சிறப்பு நிபுணர் யி கெங், திட்ட ஆலோசகர் மூஹ்யூன் சோ, சமூக மேம்பாட்டு சிறப்பு நிபுணர் சிவராமகிருஷ்ண சாஸ்திரி ஜோஸ்யுலா, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர்கள் ரேகா பிரகாஷ் (திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), எஸ்.அசோக் குமார், (வழித்தடம் மற்றும் உயர்மட்ட கட்டுமானம்), மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in