சென்னையில் செயின் பறித்த கொள்ளையர்களை கைது செய்த காவல்துறைக்கு தேமுதிக பாராட்டு

பிரேமலதா விஜயகாந்த் | கோப்புப்படம்
பிரேமலதா விஜயகாந்த் | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: சென்னையில் செயின் பறித்த கொள்ளையர்களை கைது செய்த காவல்துறைக்கு தேமுதிக பாராட்டு தெரிவித்துள்ளது. “ஸ்காட்லாந்து யார்டு காவல் துறைக்கு இணையாக செயல்பட்ட நமது காவல் துறை மீண்டும் இரானி கொள்ளையர்களைக் கைது செய்து என்கவுன்ட்டர் செய்ததற்கு பாராட்டுகள்” என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையில் சமீபமாக ஏழு இடங்களில் நடைபெற்ற செயின் பறிப்பு சம்பவம், கொள்ளையில் ஈடுபட்ட இரானி கொள்ளையர்கள் செயின் பறிப்பு செய்த சிறிது நேரத்திலேயே கைது செய்து என்கவுன்ட்டர் செய்தது பாராட்டுக்குரிய ஒன்றாகும். எனவே சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் உடனடியாக துரித நடவடிக்கை எடுத்து கொள்ளையர்களைக் கைது செய்தது மிகவும் பாராட்டுக்குரியது.

மேலும் இனி வரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருப்பதற்கு இந்த முயற்சி உண்மையிலேயே வரவேற்கத்தக்கது. அதேபோல் தமிழகம் முழுவதும் இருக்கின்ற அனைத்துவித சட்டம் ஒழுங்கு பிரச்சினையையும் கட்டுக்குள் கொண்டு வந்து, மிகச் சிறந்த முறையில் காவல்துறை பணியாற்ற வேண்டும். ஸ்காட்லாந்து யார்டு காவல் துறைக்கு இணையாக செயல்பட்ட நமது காவல் துறை மீண்டும் இரானி கொள்ளையர்களைக் கைது செய்து என்கவுன்ட்டர் செய்ததற்கு தேமுதிக சார்பில் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in