

தேனி மாவட்டம் லோயர் கேம்ப் பகுதியில் உள்ள பென்னிகுவிக் மண்டபத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏ ராமகிருஷ்ணன் (கம்பம் ) பேசும்போது, ‘‘பென்னிகுவிக் வரலாற்றை அனைவரும் அறியும் வகையில் லோயர்கேம்ப் பகுதியில் உள்ள அவரது மணிமண்டபத்தில் அருங்காட்சியகம், குறும்படங்கள் ஒளிபரப்புக் கூடம், சிறுவர் பூங்கா, உணவகம், தங்கும் விடுதி, லோயர்கேம்ப் சென்று வர மாட்டுவண்டி உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும்’’ என்றார்.
இதற்கு பதில் அளித்து சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன் பேசும்போது, ‘‘இங்கிலாந்து நாட்டில் இருந்த தன் அனைத்து சொத்துகளையும் விற்று முல்லை பெரியாறு அணையைக் கட்டிய பென்னிகுவிக்குக்கு அருங்காட்சியகம் அமைப்பது தொடர்பான கோரிக்கையை முதல்வரின் கவனத்துக்கு கொண்டுசென்று, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.