“பட்ஜெட் பதிலுரையிலும் சென்டம்” - அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு
முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு
Updated on
1 min read

சென்னை: “யாருக்கும் ஓரவஞ்சனை காட்டாத, எந்தத் துறையையும் விட்டுவிடாத all-round தமிழ்நாடு பட்ஜெட் 2025 அளித்து, பதிலுரையிலும் centum வாங்கியிருக்கும் நிதியமைச்சருக்குப் பாராட்டுகள்” என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக முதல்வர் தனது சமூகவலைதளப் பக்கத்தில், “2000 கோடி ரூபாயில் அனைத்து மாணவர்களுக்கும் தரமான Laptop வழங்கிட முடியுமா? எனக் கேட்ட உறுப்பினருக்குத் தக்க விளக்கத்தை வழங்கியிருக்கிறார் அமைச்சர் தங்கம் தென்னரசு.

கருணாநிதி வழங்கி இன்றும் ஓடிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சிப் பெட்டிகள் சொல்லும் திமுக அரசின் தரம் பற்றி! யாருக்கும் ஓரவஞ்சனை காட்டாத, எந்தத் துறையையும் விட்டுவிடாத all-round தமிழ்நாடு பட்ஜெட் 2025 அளித்து, பதிலுரையிலும் centum வாங்கியிருக்கும் நிதியமைச்சருக்குப் பாராட்டுகள்!” என்று கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in