

கடலூர்: சிதம்பரம் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸார் சார்பில் பெண் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாட்ஸ் அப் குழு துவக்கப்பட்டுள்ளது.
சிதம்பரம் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸார் சார்பில் இன்று (மார்ச்.18) காலை ரயிலில் பயணம் செய்யும் பெண் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாட்ஸ் குழு துவக்க விழா நடைபெற்றது. சிதம்பரம் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண்குமார் தலைமை தாங்கினார். சிதம்பரம் ரயில்வே மேலாளர் ராஜூ பிரசாத் முன்னிலை வகித்தார்.
இதில் ரயிலில் பயணம் செய்யும் பெண் பயணிகளுக்கு ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் உடனடியாக வாட்ஸ் குழுவில் தெரிவிக்குமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் தமிழ்நாடு ரயில்வே காவல் துறை உதவி எண் 1512 க்கு பற்றி தெரிவித்து விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வழங்கப்பட்டது. ரயில்வே போலீஸார் மற்றும் பெண் பயணிகள 50க்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டனர்