

சென்னை: வானகரம் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன். வயது மூப்பு பிரச்சினையால் அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அண்மையில் அவருக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதால், வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், உயர் சிகிச்சைக்காக சென்னை அடுத்த வானகரம் அப்போலோ மருத்துவமனையில் குமரி அனந்தன் அனுமதிக்கப்பட்டார். பல்துறை மருத்துவர்கள் குழுவினர் அவரது உடல்நிலையை கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.