‘செங்கோட்டையனுக்கு நாகரிகம் கற்றுத்தரத் தேவையில்லை’ - டிடிவி தினகரன் கருத்து

டிடிவி தினகரன் | கோப்புப்படம்
டிடிவி தினகரன் | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: "செங்கோட்டையன் அமைதியானவர், நாகரிகம், அநாகரிகம் பற்றி அவருக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை" என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தினகரனிடம் செங்கோட்டையன் அநாகரீகமாக நடந்து கொள்வதாக வைகைச்செல்வன் கூறியது பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “நாகரிகம், அநாகரிகம் பற்றி எல்லாம் செங்கோட்டையனுக்கு சொல்லித்தர வேண்டிய அவசியம் இல்லை. அவர் அமைதியானவர், எந்தவிதமான சர்ச்சையிலும் சிக்காதவர். அவர் எதிரணியில் இருந்தாலும் உண்மையைச் சொல்லித்தான் ஆகவேண்டும். 2016-ம் ஆண்டு ஜெயலலிதா விட்டுச் சென்ற ஆட்சியில் தான் எடப்பாடி பழனிசாமி முதல்வராகத் தொடர்ந்தார்.

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்கு ஜெயலலிதா நிதி ஒதுக்கீடு செய்தார். அத்திட்டத்துக்காக பழனிசாமிக்கு பாராட்டு விழாநடந்த போது, அந்தக் கூட்டத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இல்லாததது செங்கோட்டையனை வருத்தமடையச் செய்துள்ளது. அவர் ஏதற்காக வருத்தப்பட்டாரோ அது அனைவரின் வருத்தமும் கூட, பெரும்பான்மையான அதிமுக தொண்டர்களின் மனவோட்டத்தை அவர் வெளிப்படுத்தி உள்ளார்.” என்று தெரிவித்தார்.

முன்னதாக எடப்பாடி பழனிசாமி - செங்கோட்டையன் கருத்து வேறுபாடு குறித்து பேசியிருந்த வைகைச் செல்வன், “இதுதனிப்பட்ட பிரச்சினை என்று பொதுச்செயலாளர் கூறிவிட்டார். அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டத்துக்கு அவர் வரவில்லை. அவருக்கு என்ன பிரச்சினை என்று அவரிடம் தான் கேட்கவேண்டும். அதிமுக தொண்டர்களால் இயக்கப்படுகிற இயக்கம். இதில் சிற்சில பூசல்கள் இருக்கும். அவைகளைப் பேசித்தான் தீர்க்க வேண்டும். அதைவிடுத்து பொதுவெளியில் இவ்வாறு நடந்து கொள்வது அநாகரீகமான செயல்.” என்று கூறியிருந்ததது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in