டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி முறைகேடு: முக்கிய ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக அமலாக்கத்துறை தகவல் - பின்னணி என்ன?

டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி முறைகேடு: முக்கிய ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக அமலாக்கத்துறை தகவல் - பின்னணி என்ன?
Updated on
2 min read

சென்னை: தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத் தில் ரூ.1,000 கோடிக்கு முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. போக்குவரத்து தொடர்பான டெண்டர், மதுபான கூடத் துக்கு உரிமம் வழங்குவது ஆகிய வற்றில் முறைகேடு நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. பாட்டில் தயா ரிக்கும் நிறுவனங்களே இதில் முக்கிய பங்கு வகிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் டாஸ்மாக் (தமிழ் நாடுமாநில வாணிபகழகம்)நிறுவனத் துக்கு தனியார் நிறுவனங்களிடம் இருந்து மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுவதில் பல்வேறு முறை கேடுகள் நடைபெறுவதாகவும், இதில் வரி ஏய்ப்பு, சட்டவிரோத பண பரி வர்த்தனை நடந்துள்ளதாகவும் அம லாக்கத்துறைக்கு புகார் சென்றது.

10 இடங்களில் சோதனை: இந்த புகாரின் அடிப்படையில், கடந்த 6-ம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவன தலைமை அலுவலகம், அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள டாஸ்மாக் மதுபான கிடங்கு, அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர் வீடு, அலுவலகங்கள், திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனின் அக்கார்டு மதுபான உற்பத்தி நிறுவனம், எஸ்என்ஜெ, கால்ஸ், எம்ஜிஎம் உள்ளிட்ட மதுபான உற்பத்தி நிறுவனங்கள், அதன் ஆலைகள் என சென்னை, கரூர், கோவை, விழுப்புரம், புதுக்கோட்டை உட்பட தமிழகத்தில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். தொடர்ந்து 3 நாட்கள் நடைபெற்ற இந்த சோதனையில், பல்வேறு முக்கிய ஆவணங்களை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், டாஸ்மாக் நிறு வனத்தில் ரூ.1,000 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அம லாக்கத் துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அமலாக்கத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: விற்பனை விலையைவிட கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பது, டாஸ்மாக் சில்லறை மதுபான கடை களில் மூத்த அதிகாரிகள் லஞ்சம் வசூலிப்பது, ஊழியர்கள் நியமனம், இடமாற்றம் என டாஸ்மாக்கில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் குறித்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில், ஊழியர்களை பணியிட மாற்றம் செய்வது, மதுபான கூடம் நடத்த (பார்) உரிமம் வழங்குவது. போக்குவரத்து டெண்டர், சில மது பான உற்பத்தி நிறுவனங்களுக்கு சாதகமாக ஆர்டர்கள் வழங்கியது. டாஸ்மாக் கடைகளில் ரூ.10 முதல் ரூ.30 வரை கூடுதலாக பணம் வசூலித்தது தொடர்பாக பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன. குறிப்பாக, டாஸ்மாக் தொடர்பான போக்குவரத்து டெண்ட ரில் முறைகேடு நடந்தி ருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, போக்குவரத்துக்கான டெண்டரில் விண்ணப்பதாரரின் கேஒய்சி விவரமும், வரையோலை விவரமும் வெவ்வேறாக உள்ளன.

விண்ணப்பங்கள் இறுதி செய் யப்படுவதற்கு முன்பே டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் போக்குவரத்துக்காக மட்டும் ஆண்டுதோறும் ரூ.100 கோடியை டாஸ்மாக் வழங்கி வருகிறது. இதேபோல, ஜிஎஸ்டி அல்லது பான் எண், கேஒய்சி ஆதாரங்கள் இல்லாதவர்களுக்கும் மதுபானகூடம் நடத்த உரிமம் வழங்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதிகாரிகள் நேரடி தொடர்பு: தேவையைவிட அதிக அளவு ஆர்டர் கொடுத்தது. தேவையற்ற சலுகைகள் வழங்கியது போன்ற செயல்பாடுகள் மூலம், மதுபான உற்பத்தி ஆலைகளுடன், டாஸ்மாக் அதிகாரிகள் நேரடி தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது. இது சட்டவிரோத பண பரிவர்த்தனை உள்ளிட்ட குற்றங்கள் நடந்திருப்பதை எடுத்துக்காட்டுகிறது.

எஸ்என்ஜெ, கால்ஸ், அக்கார்டு, சைஃபல், சிவா டிஸ்டிலரி உள்ளிட்ட மதுபான உற்பத்தி ஆலைகள் மற்றும் தேவி, கிரிஸ்டல், ஜிஎல்ஆர் ஹோல்டிங் ஆகிய பாட்டில் தயாரிக்கும் தொழிற்சாலைகள் சட்ட விரோத பண பரிவர்த்தனை, கணக்கில் வராத பணத்தை கையாண்டு மிகப்பெரிய அளவில் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளன.

பொய்யான கொள்முதல் விவரம்: குறிப்பாக மது ஆலைகளின் செலவு அதிகரித்ததாக கணக்கு காட்டி, பொய்யான கொள்முதல் விவரங்களை குறிப்பிட்டு, பாட்டில் தயாரிக்கும் நிறுவனங்கள் மூலம் கணக்கில் வராத பணம் சுமார் ரூ.1,000 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது. பாட்டில் தயாரிக்கும் நிறுவனங் களே இந்த முறைகேட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதிக பாட் டில்கள் விற்றதாக ஆலைகளிடம் இருந்து அதிக பணத்தை பெற்று, சம்பந்தப்பட்டவர்களுக்கு கமிஷன் தொகை அனுப்பிவிட்டு, எஞ்சிய தொகையை ஆலைகளுக்கே திருப்பி அனுப்புகின்றன. இதன்மூலம் கணக்கில் வராத பெரும் தொகை உருவாகிக் கொண்டே இருக்கிறது. இதனால், பல நிறுவனங்கள் அதிக லாபம் சம்பாதித்திருப்பது தெரியவந்துள்ளது.

டாஸ்மாக் தொடர் பான சட்டவிரோத விவகா ரங்களில் டாஸ்மாக் நிறு வனம், மதுபான உற் பத்தி நிறுவனங்கள், பாட்டில் தயாரிக்கும் நிறுவனங் கள், டாஸ்மாக் ஊழியர் கள், மற்றும் இதில் தொடர்புடைய பலரிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in